???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'போக்குவரத்து போலீஸார் ஏற்படுத்திய மனவேதனை' - இயக்குநர் ரமணா உருக்கம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   27 , 2019  05:27:55 IST


Andhimazhai Image
விஜய் நடித்த 'திருமலை', 'ஆதி', தனுஷ் நடித்த 'சுள்ளான்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா, போக்குவரத்துக் காவல்துறையினரால் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து முகநூலில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார். தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ரமணாவை போக்குவரத்து போலிஸார் நடத்திய விதம், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்று நோய் பாதிப்போடு போராடிக்கொண்டிருப்பவர்களை மேலும் காயப்படுத்தும் வகையில் நடந்துக்கொள்வது எத்தகைய தவறான செயல் என்பதை உணர்த்தும் செய்தியாக இயக்குநர் ரமணாவின் இந்த பதிவு உள்ளது.
 
தனது முகநூல் பதிவில், "கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சியமும், நட்பும் உண்டு. ஆனால்...
 
இன்று மேலே படத்திலுள்ள, நான் சந்தித்த நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் K. குமரன், காவலர் M. ராமர் இருவரும் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூடக் கருதத்தகுதியற்றவர்கள்.
 
இன்று காலை நான்,என் மனைவி, மகள் உட்பட காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துக்கொண்டிருந்தது.
 
சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தைத் திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை வழியில் அங்கிருந்த காவலர் M. ராமர் வழிமறித்து காரை நிறுத்தச்சொல்லி நான் விதியை மீறித் திரும்பியதாகச் சொல்லி அபராதம் கட்ட சொன்னார். ஆனால், விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசன்சை காண்பிக்கச்சொல்லி வாங்கி அங்கு அபராதம் விதித்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் K. குமார். அவர்களிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.
 
அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காகக் காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.
 
அப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் திரு. K. குமார். அவர்கள் என்னைப் பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற கேன்சரால் பாதிக்கப்பட்டதை அறிந்தும் அவர் அப்படிப் பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
 
ஒரு கேன்சரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல்துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதானமற்ற முறையில் பேசியது வேதனைக்குறியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட. அதைவிடக் கொடுமை. அழைத்துவந்த காவலர் M. ராமரிடம், "பாதியிலயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிக்கொண்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..?" என்று கூற, நான் அவரிடம் "நீங்கள் அப்படிப்பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன்... நீ என்ன பெரிய மயிரா..? என்ன புடுங்குறியோ போய் புடுங்கு..." என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாக பேச, கோபத்தால் நானும் அவரை என்னை அவர் கூறிய அதே வார்த்தைகளால் அவரைத் திருப்பித்திட்ட...வாக்குவாதம் நீடிக்க... பக்கத்தில் முதல் கூறிய வட்டத்தில் மற்ற உதவி ஆய்வாளர் பதவி வகிக்கும் ஒருவர் உண்மையை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.
 
அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒரிஜினல் லைசன்ஸ் அந்த கண்ணியமற்ற காவல் அதிகாரியிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயல, என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போகவேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூற, மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்...
 
ஆனால் அந்த K. குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளை வேண்டுமென்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, ”உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசன்சை தருவேன்” என்று நிர்ப்பந்தித்ததால், என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கிக் கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராத்தை செலுத்தி என் ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றுக்கொண்டுவந்து தந்தாள்.
 
அவள் அபராதம் செலுத்தியது எனக்குத் தெரியாத காரணத்தால் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.
 
 
அரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதானமற்ற மோனமான ஈனச்செயலில் இடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை. குறிப்பாக கேன்சர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவாரென்றால்... சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது.
 
உயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொண்டிருக்கும் எங்களைப்போன்ற கேன்சர் போராளிகள் யாரிடமும் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை... ஆனால், இவர்களைப் போன்றவர்கள் கருணையுடன் நடத்தவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் பாதியில் சாகப்போகிறவன்... என்றும் கண்ணியமில்லாத வார்த்தைகளைச் சராசரி மனிதர்களிடம் அதிகாரத் திமிரில் பயன்படுத்திக் காயப்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
 
செய்வார்களா...?" எனும் கேள்வியை இயக்குநர் ரமணா முன்வைத்திருக்கிறார். இந்த சம்பவம் நேற்று நடைப்பெற்ற நிலையில், காவல் துறை துணை ஆணையர் மற்றும் காவல்துறை பெண் அதிகாரி ஆகியோர் ரமணாவின் வீட்டிற்கு சென்று நடந்தவை குறித்து விசாரித்ததோடு வருத்தம் தெரிவித்துள்ளனர்.  மேலும், போக்குவரத்து ஐஜி-யும் இயக்குநர் ரமணாவிடம் பேசியதாக கூறப்பட்டிருக்கிறது. 
 

English Summary
Strange moment for ramana

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...