???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு!

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  23:43:02 IST

கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தில் நேற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இந்தநிலையில், இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டம் முடிந்து, அவர் கீழே இறங்கும்போது அவரை நோக்கி ஒரு கும்பல் செருப்பு, கற்கள், முட்டைகளை வீசினர். ஆனால், செருப்பு, கல் போன்றவை கமல் மீது படவில்லை. கற்களை வீசியவர்கள் மீது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் சராமாரியாக தாக்குதலில் ஈடுபட்டார்கள். கற்களை வீசியவர்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பின்னர், அங்கு கூடியிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகிலிருந்த ஹோட்டலில் தங்கவைத்தனர்.

அதனையடுத்து, கற்களை வீசிய கும்பல் அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சினேகன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...