???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பங்குச் சந்தையில் இன்று - 26.10.2012

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   26 , 2012  07:45:10 IST

உலக அளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட   தொய்வு   இன்று இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இன்றைய வர்த்தகத்தின் முற்பகுதியில் நகருவேனா என்று அடம் பிடித்த பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் Nifty , பிற்பகுதியில் சற்று சுறுசுறுப்பானது. Nifty 41 புள்ளிகள் குறைந்து 5641 லும் சென்செக்ஸ் 133 புள்ளிகள் குறைந்து 18625 லும் முடிவடைந்தன. வங்கிகள், நிதி நிறுவனங்கள், மற்றும் நுகர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வீழ்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன.

எது எப்படியோ நவம்பர் மாதத்தில் பங்குச் சந்தையில் சில விறுவிறுப்பான மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை முதலீட்டாளர்கள்  எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப் போகும் இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதாரக் கொள்கையின் மீள்பார்வை (Review of RBI 'S Monetary Policy ) அறிக்கை இந்த மாற்றங்களுக்கு ஒரு காரணமாக அமையும். இதற்கும் மேலாக உலகின்  மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் உலகப் பங்குச் சந்தைகளில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தப்போவது நிஜம்.

வங்கித்துறைப் பங்குகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 8 சதவிகிதமும் , இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்குகள் 7 சதவிகிதமும் குறைந்து முதலீட்டாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது. உலக அளவில் அனைத்துப் பங்குச் சந்தைகளும் ௦.5  சதவிகிதம் முதல் 1 .5 சதவிகிதம் வரை குறைந்து முடிவடைந்தன. தேசியப் பங்குச் சந்தையில் 1029 பங்குகளின் விலைகள் குறைந்தும் 429 பங்குகளின் விலைகள் உயர்ந்தும் முடிவடைந்தன.


English Summary
Indian shares closed lower following weak global cues.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...