???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பங்குச் சந்தையில் இன்று - 25 .10 .2012

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   25 , 2012  07:55:14 IST

இன்று எந்த பரபரப்பும் இல்லாமல் வர்த்தகம் நடந்த பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 48  புள்ளிகள் அதிகரித்து 18758 லும் Nifty 13 புள்ளிகள் அதிகரித்து 5701 லும் முடிவடைந்தன. அக்டோபர் - 2012 க்கான derivatives காலாவதி நாளான இன்று பெரிதான ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் நடந்த பங்கு வர்த்தகம் பலரை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது.  பங்குச் சந்தை ஒரு மிகப் பெரிய பயணத்திற்கு (மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ) தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான்   கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக ஒரு சிறிய எல்லைக்கு உள்ளாகவே ஊசலாடும் Nifty மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் சொல்லாமல் சொல்லுகின்றன.

Nifty ஐப் பொறுத்தவரை 6000 என்பது மேல்நோக்கிய பயணத்தில் மிகப் பெரிய தடையாக இருக்கும் என்றும், 5600 வீழ்ச்சியில் மிகப் பெரிய ஆதாரமாக இருக்கும் என்றும் தெரிகிறது. 5600 ஐத் தாண்டி Nifty முடிவுறும் பட்சத்தில் Free Fall  என்று சொல்லப்படும் பாதாளச் சரிவை சந்திக்க நேரிடலாம். Nifty 5700 ஐத் தாண்டி முடிவடைந்திருப்பது சற்றே நம்பிக்கை அளித்தாலும், பெரும்பாலான நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை தைரியமூட்டினாலும், Range Bound என்று சொல்லப்படும் இந்த எல்லைக்குட்பட்ட வர்த்தகம் கவலையை அளிக்கிறது. அடுத்த வாரத்தில் முதல் மூன்று நாட்கள் நடைபெறும் வர்த்தகம் பங்குச் சந்தையின் போக்கை நமக்குக் காட்டும்.

இன்று பங்குச் சந்தை உயர்வுடன் முடிந்திருந்தாலும் பங்குகளைப் பொறுத்த வரையில் 579 பங்குகள் விலை உயர்ந்தும் 863 பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.


 


English Summary
Another day with range bound trading with less volatility. Market is consolidating and getting ready for another momentum.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...