???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவ.5 - பங்குச் சந்தை

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   05 , 2012  06:07:46 IST

இன்று காலையில் சற்றே சரிவுடன் தொடங்கிய பங்கு வர்த்தகம், நாள் முழுவதும் பரபரப்பில்லாமல் மந்தநிலையில் காணப்பட்டது. பங்குச் சந்தைகள் மூடப்பட்டபொ ழுது, சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்து 18762லும் நிப்டி 6 புள்ளிகள் உயர்ந்து 5704லும் முடிவடைந்தன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திடீரென 1.44 சதவிகிதம் (77 பைசாக்கள்) குறைந்ததும் கூட பங்குச் சந்தையின் பரபரப்பைக் கூட்டவில்லை.

அமெரிக்காவில் நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தே அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதும் குறைவதும் அமையும் என்றும், இந்தியப் பங்குச் சந்தைகளின் தேக்கநிலையும் அதை அனுசரித்தே மாறும் எனவும் திடமாக நம்பப் படுகிறது. பொதுவாகவே மிகப் பெரிய தேக்கநிலைக்குப்பின் பங்குச் சந்தைகள் பெரிய உயர்வையோ அல்லது வீழ்ச்சியையோ சந்திக்கும் என்பதே , சந்தை வரலாற்றின் பழைய பக்கங்கள் நமக்குச் சொல்லும் உண்மை.

பெரிய நிபுணர்களாலு ம் பங்குச் சந்தையின் இப்போதைய போக்கைக் கணிக்க முடியவில்லை. இந்தியப்  பங்குச் சந்தையின் "பெரும் காளை " (Big Bull ) எனக் கருதப்படும் திரு.ராகேஷ் ஜுஞ்சன்வாலா இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் சென்செக்ஸ் குறியீடு 22000 என்ற புதிய உச்சத்திற்கு செல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். வங்கிகள் மற்றும் கட்டுமானத்துறை மிகப்பெரிய வளர்ச்சி காணும் என்பது அவர் கணிப்பு.

ரிலையன்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, M &M ,ஏர்டெல் நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் ITC மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களான Dr.Reddy 's , CIPLA போன்ற நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. மொத்தத்தில் தேசியப் பங்குச் சந்தையில் 810 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் 636 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் வர்த்தகமாயின. இன்று மதிய நிலவரப்படி ஐரோப்பாவின் பங்குச் சந்தைகளும் 0.7 முதல் 1  சதவிகிதம் வரையிலான சரிவுடன்  தொடங்கியுள்ளன.


English Summary
Sensex and Nifty end flat. Investors are keen on USA election results.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...