Posted : புதன்கிழமை, பிப்ரவரி 16 , 2022 16:02:38 IST
இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் மூன்றாவது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் குறைந்ததால் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.
நேற்று 58,142.05 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,310.68 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 145.37 புள்ளிகளை இழந்து 57,996.68 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
அதேபோல், 17,352.45 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,408.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 30.25 புள்ளிகள் இழந்து 17,322.20 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
எச்டிஎஃப்சி, கோடாக் மகிந்த்ரா, பாரதி ஏர்டெல் பங்குகள் ஏற்றத்தையும் ஐசிஐசிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது.