???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவ.21 - பங்குச் சந்தை

Posted : புதன்கிழமை,   நவம்பர்   21 , 2012  05:12:22 IST

இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் 65 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய மும்பைப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 131 புள்ளிகள் உயர்ந்து 18460ல் முடிவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 5614ல் முடிவடைந்தது. Cipla , சன் Pharma  போன்ற மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 2.5 சதவிகிதம் வரை அதிகரித்து இன்றைய உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் அந்நிய நிறுவனங்களின் நேரடி முதலீடு குறித்த சர்ச்சைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் Pantaloon  Retail , Shopper 's  Stop போன்ற நிருவனங்களின் பங்குகளை வாங்கிக் குவித்ததில் அந்த நிறுவனப் பங்குகள் முறையே 7 மற்றும் 3 சதவிகித அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாயின. ICICI , ITC மற்றும் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகமாயின.

நவம்பர் 22ல் தொடங்க இருக்கும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், சில்லறை விற்பனை நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விலைகளில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம். இன்னும் கூட சந்தை காளைகளின் பிடியில் இருப்பதாகக் கூறிக் கொண்டாலும் பிடி சற்று தளர்ந்து வருவதாகவே தெரிகிறது. ICICI Direct  நிறுவனத்தைச் சார்ந்த பங்குச் சந்தை வல்லுனர்களும் நிப்டி 5400ஐயோ அல்லது அதனையும் தாண்டியோ குறையலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று  மற்ற ஆசிய நாடுகளான ஜப்பான், ஹாங்காங் போன்றவற்றின்  பங்குச் சந்தைகளும் உயர்விலேயே முடிவடைந்தன. மும்பைப் பங்குச் சந்தையில் வர்த்தக நேர முடிவில் 1462 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1326 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...