???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவ.19 - பங்குச் சந்தை

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   19 , 2012  06:12:51 IST

வாரத்தின் முதல் நாளான இன்று, சற்றே ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் Nifty, அதன் பின்னர், பெரிய பரபரப்பில்லாமல் சின்ன வரம்புக்குள் ஊசலாடிக் கொண்டிருந்து விட்டு, முறையே 29 புள்ளிகள் ஏற்றத்துடனும் 2.65 புள்ளிகள் சரிவுடனும் முடிவடைந்தன. சென்செக்ஸ் 18339லும் Nifty 5571லும் முடிவடைந்தன. ஆசியாவின்  மற்ற பங்குச் சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் இந்தியப் பங்குச்  சந்தைகளில் பிரதிபலிக்காமல் போனது ஏமாற்றம்தான்.

நவம்பர் 22ல் தொடங்க இருக்கும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முடிவுகள் சாதகமாக அமையும் பட்சத்தில் Nifty மறுபடியும் 5800ஐத் தாண்டிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன என்று IL &FS  நிறுவனத்தைச் சேர்ந்த திரு.வைபவ் கபூர் கருத்து தெரிவித்துள்ளார். டெக்னிகல் ஆய்வுகளின்படி, Nifty 5850ஐத் தாண்டாத பட்சத்தில் இன்னும் சில வாரங்களில் 5450ஐயும் தாண்டி சரியும் என்பதையே வரைபடங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய வர்த்தகத்தில் மாருதி சுசூகி நிறுவனப் பங்குகள் சுமார் நான்கு சதவிகிதம் வரை விலை உயர்ந்து வர்த்தகமாயின. கடந்த ஐந்து நாட்களாகவே தொடர்ந்து விலை உயர்ந்து வரும் ஏர்டெல் நிறுவனப் பங்குகளின் விலை இன்று மூன்று சதவிகிதம் உயர்ந்தது. கடந்த ஐந்து நாட்களில் ஏர்டெல் நிறுவனப் பங்குகளின் விலை 12.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பைப் பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில், 1762 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் 1004 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் முடிவடைந்தன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...