???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவ.16 - பங்குச்சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   16 , 2012  06:44:47 IST

இன்று காலையில் சரிவுடனே தொடங்கிய பங்கு சந்தைகள், மேலும் கீழுமாக ஊசலாடிவிட்டு சரிவிலேயே முடிவடைந்தன. கடந்த சில தினங்களாவே கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வந்த சென்செக்ஸ் இன்று ஒரேயடியாக 162  புள்ளிகள் சரிந்து 18309ஐத் தொட்டது. Nifty 56 புள்ளிகள் சரிந்து 5600 என்ற ஆதாரத்தையும் தாண்டி 5574ல் முடிவடைந்தது. இது கடந்த இரு மாதங்களில் மிகக் குறைந்த ஒன்றாகும். மதியம் 3.30 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 47 பைசாக்கள் குறைந்து 55.17 என்று இருந்தது.

உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையும் பங்குச் சந்தைக் குறியீடுகளின் உயர்வுக்குத் தடையாக உள்ளன. நவம்பர் 22ல் தொடங்க இருக்கும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தின் நிச்சயமற்ற தன்மையும் இந்த சரிவுக்கு ஒரு காரணம் என்று NSE மற்றும் BSE உறுப்பினராக இருக்கும் தீபன் மேத்தா குறிப்பிட்டுள்ளார் . அமெரிக்காவின் பொருளாதாரம் கவலை அளிப்பதாக உள்ளது என்று அதிபர் ஒபாமா வெளியிட்ட அறிக்கை எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போலானது. வர்த்தகத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் Nifty கிட்டத்தட்ட 100 புள்ளிகள் சரிந்தன.

இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை, நிதித்துறை நிறுவனங்கள் , நுகர்பொருட்கள் நிறுவனங்கள், போன்றவற்றின் பங்கு விலைகள் மிகவும் குறைந்து இன்றைய சரிவில் மிக முக்கியப் பங்கு வகித்தன.மொத்தத்தில் இன்று மும்பைப் பங்குச் சந்தையில் 1728 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் 1063 நிருவனப்  பங்குகள் விலை உயர்ந்தும் முடிவடைந்தன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...