???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவ.12 - பங்குச் சந்தை

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   12 , 2012  06:19:02 IST

இன்று இந்தியப் பங்குச்சந்தைக் குறியீடுகள்  பெரிதான மாற்றம் ஏதுமின்றி முடிவடைந்தன. சென்செக்ஸ் 13.3 புள்ளிகள் குறைந்து 18670லும் Nifty  2.5 புள்ளிகள் குறைந்து 5683லும் முடிவடைந்தன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் மதியம் 3.30 மணி நிலவரப்படி 27 பைசாக்கள் குறைந்து 55.02ஐத் தொட்டிருந்தது. வங்கித் துறைப் பங்குகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் HDFC வங்கிப் பங்குகளின் விலைகள் முறையே 1.6 மற்றும் 1.9 சதவிகித உயர்வுடன் முடிந்தன. தனலட்சுமி வங்கிப் பங்குகள் 7.5 சதவிகிதம் விலை உயர்ந்து வர்த்தகமாயின.

"மற்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளோடு ஒப்பிடுகையில் இந்தியப் பங்குச் சந்தையில் நடப்பு ஆண்டிற்கான அந்நிய நிதி நிறுவனங்களின்  முதலீடு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது" என்று "Standard Chartered Securities " நிர்வாக இயக்குனர் திரு.ரத்னேஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். எனினும் இந்த நிலை தொடருமா என்பது இப்போதைக்கு விடை தெரியாத கேள்விதான் என்றும்  தெரிவித்தார். நடப்பு ஆண்டில் அந்நிய நிதி நிறுவனங்கள் 94381 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியப் பங்கு சந்தைகளில் முதலீடு செய்துள்ளன. மும்பைப் பங்குச் சந்தைகளின் முன்னணி 100 நிறுவனங்களில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு 37.95 சதவிகிதம் என்ற நிலையை எட்டியுள்ளது. 2007 டிசம்பர் மற்றும் 2008 ஜனவரி மாதங்களில் சென்செக்ஸ் உச்சத்தைத் தொட்டபோது இது 38.54 சதவிகிதமாக இருந்தது.

உயர்ந்து வரும் இந்த அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடுகள் நம்பிக்கை அளிப்பதாகவும், வரும் 2013ஆம் ஆண்டில் Nifty 6300 என்ற எல்லையை தாண்டிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன என்றும் சி.என்.ஐ. நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. கிஷோர் ஆஸ்த்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பைப் பங்குச் சந்தையில் 650 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 788 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. நாளை, செவ்வாய்க் கிழமை அன்று, தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மதியம் 3.30 மணி அளவில் சிறப்பு வர்த்தகத்திற்காக மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகள் திறக்கப் படுகின்றன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...