???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவ.7 - பங்குச் சந்தை

Posted : புதன்கிழமை,   நவம்பர்   07 , 2012  05:10:37 IST

இன்று காலையில் சற்றே சரிவுடன் தொடங்கிய பங்கு வர்த்தகம் மதிய வேளையில் சூடு பிடித்தது. ஒபாமாவின் வெற்றியும் ஒரு காரணமாக இருக்கலாம். சென்செக்ஸ் 85 புள்ளிகள் அதிகரித்து 18902ல் முடிவடைந்தது. Nifty 35 புள்ளிகள் உயர்ந்து 5750க்கு மேலான தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டது. தொடர்ந்து 6 நாட்களாக பங்குச் சந்தை உயர்வில் முடிவடைந்ததும், Nifty  5730 என்ற தடையைத்  தாண்டிச் சென்றதும், ஒபாமாவின் வெற்றியும் சேர்ந்து உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கலாம்.

இன்றைய மொத்த வர்த்தகத் தொகை 1.87 லட்சம் கோடியைத் தொட்டது. கடந்த சில நாட்களோடு ஒப்பிடுகையில் இது அதிகபட்ச தொகையாகும். எப்படியோ, உறக்கத்தில் இருந்த பங்குச் சந்தை முழித்துக் கொண்டது போல்தான் தோன்றுகிறது. Nifty 5850ஐக் கடந்து தொடர்ச்சியாக மூன்று நாட்களேனும் நிலைப்படுமானால் அதன் போக்கை ஓரளவுக்குக் கணிக்க முடியும்.

வங்கிகள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் 1 முதல் 2 சதவிகிதம் வரை விலை உயர்ந்து வர்தகமாயின. ஏர்டெல், டாடா பவர் போன்ற நிறுவனப் பங்குகளின் விலைகள் சற்று சரிவுடன் முடிவடைந்தன. தேசியப் பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில்  888 பங்குகள் விலை உயர்ந்தும் 541 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. மதிய நிலவரப்படி ஐரோப்பாவின் பங்குச் சந்தைகளும் சற்று ஏற்றத்துடன் தொடங்கின.


English Summary
Market is bullish for 6 consecutive days. Remained the bull grip on the outcome of US elections.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...