???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவ.2 பங்குச் சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   02 , 2012  06:18:25 IST

இந்தியப் பங்குச்சந்தைகளில் நேற்றைய தினம் காணப்பட்ட முன்னேற்றம் இன்றும் தொடர்ந்தது. சென்செக்ஸ் மற்றும் Nifty தலா ஒரு சதவிகிதம் உயர்வடைந்து முடிந்தன. சென்செக்ஸ் 184  புள்ளிகள் உயர்ந்து 18746 லும் Nifty  50  புள்ளிகள் உயர்ந்து 5695 லும் முடிவடைந்தன. GAIL , பஜாஜ் ஆட்டோ. L &T , ICICI  மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனப் பங்குகள் இன்றைய உயர்வுக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான "ஹீரோ மோட்டோ கார்ப்"பின் அக்டோபர் மாத வாகன விற்பனை முந்தைய மாதமான செப்டம்பரைக் காட்டிலும் 31 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே துறையின் மற்றொரு நிறுவனமான "பஜாஜ் ஆட்டோ"வின் விற்பனையும் 14  சதவிகிதம் அதிகரித்து அந்த நிறுவனப் பங்கின் விலையை 1905 க்கு கொண்டு சென்றது. வரும் மாதங்களிலும் இரு சக்கர வாகன விற்பனை அமோகமாக இருக்கும் என்று நம்பப்படுவதால், இந்தத் துறை முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வரும் மாதங்களில் Nifty மேலும் உயர்ந்து புதிய உச்சமான 6700 க்குச் செல்லும் என்று சில பங்கு வர்த்தக நிபுணர்கள் சிலர் ஆரூடம் கூறினாலும், இது எந்த அளவுக்குப் பலிக்கும் என்பது FII எனப்படும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களைச் சார்ந்தே அமையும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் இந்தியப் பங்குச் சந்தைகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். வரப் போகும் மாதங்களில் பங்குச் சந்தை மிகுந்த ஏற்ற இறக்கங்களுடன் காணப் படும் என்பதால் தினசரி பங்கு வர்த்தகர்கள் (Intraday Traders ) இதனை பணம் பண்ணுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்றைய வர்த்தகத்தில் மும்பைப் பங்குச் சந்தையில் 1521 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 1288 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 648 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றமில்லாமலும் முடிவடைந்தன


English Summary
Indian Stock Market indexes extended their yesterday gains and closed in positive terrains.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...