???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   25 , 2018  07:07:58 IST

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
தூத்துக்குடி அருகே செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் விவசாயம் மற்றும் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக  மூடக்கோரி குமரெட்டியாபுரம்  கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளும் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டன. 
 
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. பேருந்து நிறுத்தம் அருகே கோரிக்கையை வலியுறுத்தி சமூக அமைப்புகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
 
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்டெர்லைட்  ஆலையை  நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் இது தொடர்பாக வலைத்தளங்களில் #Bஆண்ஸ்டெர்லிடெஸாVஏTHஓஓTHஊKஊDஈ #ஸ்டெர்லிடெPரொடெச்ட் #Bஅன்ஸ்டெர்லிடெ போன்ற ஹேஷ்டேக் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் பலரும் தூத்துக்குடி மாவட்டத்தை காக்க ஸ்டெர்லைட்டை மூடுவோம் என பதிவிட்டு வருகின்றனர்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...