???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமும்… காணாமல் ஆக்கப்பட்ட முகிலனும்!

Posted : புதன்கிழமை,   மே   22 , 2019  00:54:57 IST


Andhimazhai Image
மே 22, இந்த நாளை தமிழக மக்களால் எளிதில் மறந்துவிட முடியாது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட நாள் இது. இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் நிறைவுற்றிருக்கிறது. இந்த சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும் நீதி கிடைத்ததா என்று கேட்டால் இல்லை என்ற பதிலே உரக்க ஒலிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு  எதிரான போராட்டம் ஏதோ திடீர் என்று முளைத்தது என்று பலரால் கூறப்படுகிறது. ஆனால் பல வருடங்களாகவே தூத்துக்குடி மக்களும், அரசியல் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருகின்றனர்.
 
இதற்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை எப்படி தமிழகத்திற்கு வந்தது. அதற்கு ஏன் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்  மற்றும் எத்தனை முறை அலைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
 
ஸ்டெர்லைட் ஆலையும் சட்டப்போராட்டமும்!
 
1994 ஆகஸ்ட் 1ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் அமைக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  அனுமதி வழங்கியது. அமைக்கப்படும் ஆலை மன்னார் வளைகுடாவில் இருந்து  25 கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றிய அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சி.  மறைந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தார்.
 
1995ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை பற்றிய அறிக்கையை ஸ்டெர்லைட் ஆலை சமர்ப்பிக்காதபோதும், அதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்கியது. மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது. ஆனால் இதை பெரிதாக கண்டுகொள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால் ஆலையின் உத்தரவு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியது.
 
1997 மே மாதம் 5ம் தேதி, ஆலைக்கு அருகில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் மூவர், ஆலையிலிருந்து கசிவு ஏற்பட்டதால் மயக்கம் அடைந்ததாக புகார் எழுந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட்  மாதம் ஆலைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் ஸ்டெர்லைட் ஆலையிருந்து  வெளியாகும் புகையால் பாதிக்கப்பட்டனர் என்று புகார் எழுந்தது.
1998ம் ஆண்டு தூய்மையான சுற்றுசூழலுக்கான தேசிய அறக்கட்டளை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தொடர்ந்தது.  அப்போது ’நீரி என்ற தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தை  ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறித்தியது. நீரி சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 
இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை சார்பாக முறையீடு செய்யப்பட்டபோது, இந்த தீர்ப்புக்கு மாறாக  ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ‘நீரி’ நிறுவனத்தை மீண்டும் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது.
 
நீரி அமைப்பின் இரண்டாவது அறிக்கை ஸ்டெர்லைட்  ஆலைக்கு சாதகமாக இருந்தது.
இதுபோன்று தடை விதிப்பதும் மீண்டும் தடையை நீக்குவதுமாக சட்டப்போராட்டம் அமைந்தது.
2001ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போரடத் தொடங்கினர்.

ஆனால் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகமோ தனது உற்பதியை உயர்த்தியது. 2008-ஆம் ஆண்டில் ஒரு நாளுக்கு 900 டன்னாக இருந்த உற்பத்தியை 1200 டன்னாக உயர்த்தியது.
2006-ஆம் ஆண்டு  திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி,  ஸ்டெர்லைட்டை சுற்றி குடியிருக்கும் மக்களிடம் நடத்திய ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ஆலையிலிருந்து சுமார் 5 கிலோமிட்டர் தொலைவில் இருக்கும் மக்கள் அனவருக்கும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் ஏற்படுவது கண்டறியப்பட்டது.

மேலும் ஆலைக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவது கண்டறியப்பட்டது. கருப்பை புற்று நோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், குறைந்தது ஒரு குடும்பத்தில் இருவர்  புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வெளியானது.
 
2013-ஆம் ஆண்டு தூத்துக்குடி நகரம் முழுவதும் மக்கள் தலைவலி,  கண் எரிச்சல், இருமல் என்று பல உடல்நலக் குறைவுகளுக்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மீது மக்கள் கொடுக்கும் புகார்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகக் கூறியது. ஆலைக்கு தடைவிதித்தால் அங்கு வேலை செய்யும் 1,300 பேரும் வேலை இழப்பார்கள் என்றும் அதனால் தடைவிதிக்க இயலாது என்று  கூறிய நீதிமன்றம் , ஸ்டெர்லைட் ஆலைக்கு ரூ 1000 கோடி அபராதம் வழங்கி உத்தரவிட்டது.
 
சட்டப்போராட்டம் மூலம் எந்த பயனையும் அடையாத மக்கள்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஒன்று கூடி, 2018-ஆம் ஆண்டு  போராட  முடிவெடுத்தனர் . ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து 100 நாட்கள் போராடினர். 99 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் 100 வது நாள் கலவரம் வெடித்தது. சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக நடிகர் ரஜினிகூட கருத்து கூறினார். மக்கள் வன்முறையில் ஈடுபட்டதால்தான் நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினோம் என்று தமிழக மக்களை அரசு நம்பவைத்தது.
ஆனால் இந்த கலவரம் என்பது திட்டமிட்ட சதி என்றும், இந்த கலவரத்தை நடத்தியதே தூத்துக்குடி  தென்மண்டல காவல்துறை என உரிய வீடியோ ஆதாரத்தோடு வெளியிட்டார் சமூக செயற்பாட்டாளர் முகிலன்.
 
பிப்ரவரி 15ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கான ஆவணத்தை வெளியிட்ட முகிலன், 16ம் தேதி காணமல் போனார்.  மதுரைக்கு ரயில் ஏறிய அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு பூங்கொடி நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு  தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஸ்டெர்லைட் அடியாட்கள்தான் அவரை கடத்தியிருப்பார்கள் என்றும், இதற்கு காவல்துறையும், தமிழக அரசும் உடைந்தையாக இருந்திருக்கிறது என்று மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி விமர்சித்துள்ளார். மதிமுக, இடதுசாரி அமைப்புகள், திமுக போன்ற அரசியல் கட்சிகளும் முகிலன் காணாமல்போனதற்கு பின்னால் தமிழக அரசின் பங்கும் இருக்கிறது என்று குற்றம்சாட்டி வருகிறார்கள்.
 
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி கூறும்போது அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புபவர்களை காணாமல் ஆக்குவது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்திருப்பதாக கூறுகிறார்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியதால் சுடப்பட்ட 13 பேரும், இறந்தவர்களுக்கு பின்னால் நடந்த சூழ்ச்சியை வெளிகொண்டு வந்ததால் காணாமல்போன முகிலனும் நம்மிடம் கேட்கும் கேள்வி ஒன்றுதான்?  அநீதிகளுக்கு எதிராக நாம் அனைவரும் மீண்டும் எப்போது ஒன்றுகூடுவோம்?  என்பதுதான்!

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...