???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: இன்று தீர்ப்பு!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   17 , 2019  21:18:00 IST

ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் அறிக்கையின் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையை நிபந்தனைகளுடன் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரம், ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் சமூக ஆர்வலர் பாத்திமா பாபு ஆகியோரும் மனுத் தாக்கல் செய்தனர்.
 
விசாரணையின் போது தருண் அகர்வால் குழு அறிக்கை யூகங்களின் அடிப்படையிலானது என்றும், உண்மை நிலவரத்தை அறிக்கையாக சமர்பிக்கவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. எனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது. இதனிடையே போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு முயற்சிப்பதாக வேதாந்தா நிறுவனம் தனது வாதத்தின் போது குற்றம்சாட்டியது.
 
இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. அதன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மனுதாரர்கள் அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக கடந்த 11-ம் தேதி தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்குகளின் மீது நீதிபதி ரோஹிந்தன் ஃபாலி நாரிமன் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...