???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து! 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

144 தடை உத்தரவு கேட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணை

Posted : புதன்கிழமை,   மே   16 , 2018  01:06:40 IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுவட்டார பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க கோரிய ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பாதுகாப்பு நலன் கருதி தொழிற்சாலை பகுதிகளை சுற்றி 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு போராட்டகாரர்கள் வராமல் இருக்க,  144 தடை உத்தரவு பிறப்பிக்க கோரி தொழிற்சாலை சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ' மே 22 போராட்டம் ' என்ற தலைப்பில் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்த, சமூக வலைதளங்களில் ஆட்களை திரட்டி வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, தொழிற்சாலைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. 
 
இந்த மனுவை நிறுவனத்தின் பொது மேலாளர் சத்யபிரியா உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெறவுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...