???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் 0 பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு 0 சபரிமலை விவகாரம்: 3 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 0 பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு இல்லை: நடிகர் சிவக்குமார் 0 உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது: நீதிமன்றம் சொல்கிறது! 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஸ்டீபன் ஹாங்கிங்: கருந்துளைகளும் வேற்றுக்கிரகவாசிகளும்

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  04:48:12 IST


Andhimazhai Image
 
 
 
 
ஸ்டீபன் ஹாக்கிங் மிகவும் உடல்நலிவுற்று பேசவே முடியாத நிலையில் முகத்தசைகளின் அசைவில் கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்த முக்கியமான அறிவியலாளர்.  ஆகையால் அவர் கருத்துகள் உலகம் முழுக்க கூர்ந்து கவனிக்கப்பட்டன. அவரது நூல்கள் வேதமென வாசிக்கப்பட்டன. ஐன்ஸ்டீனுக்கு அப்புறம் உலகம் கண்ட ஒரே மாமேதை இவர்தான் என்று சொல்வார்கள். அவரது அறிவியல் கருத்துகள் சிலவற்றை உதாரணத்துக்குப் பார்ப்போம்:
 
உடனடியாக பூமி வெப்பமடைதலைத் தடுக்காவிட்டால் பூமி சூரியனில் இருந்து இரண்டாவது வரிசையில் இருக்கும் கோளான வெள்ளியைப்(Venus) போல் ஆகிவிடும். ஒரு காலத்தில் வெள்ளியிலும் பூமியைப்போல் நீர், மிதமான வெப்பம் நிலவி இருக்கிறது. ஆனால் பூமியை வெப்பமடைய வைக்கும் வாயுக்களால் அச்சூழல் மாறிவிட்டது என்றார் ஹாக்கிங். இப்போது அங்கே 250 டிகிரி செல்சியஸ் வெப்பமும் 3000 கிமீ வேகத்தில் புயலும் வீசிக்கொண்டிருக்கின்றன. யாராவது புவி வெப்பமடைதல் என்ற கொள்கைக்கு எதிராகப் பேசினால் அவரை வெள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என்றார் அவர்.
 
 
பூமியில் இட நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே விரைவில் விண்வெளியில் புதிய இடங்களைக் கண்டறிந்து மனிதன் வாழத்தொடங்கவேண்டும். உலகநாடுகள் இந்தப் பணியில் மேலும் கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர். நம் பூமி மிகவும் பலவீனமான கிரகம். இங்கு அடுத்த 1000 ஆண்டுகள் வரை மனிதகுலம் வாழமுடியுமா என்பதே சந்தேகம் என்று குறிப்பிட்டார் அவர். எனவே அடுத்த 200-500 ஆண்டுகளில் பூமிக்கு வெளியே மனிதர்கள் வசிக்கத்தொடங்கவேண்டும் என்பது அவரது கருத்து.
 
 
இப்பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியர்கள் அல்ல என்ற எண்ணம் அவருக்கு இருப்பதாகவும் எதிர்காலத்தில் பல ஒளி ஆண்டுகள் தள்ளி இருந்து வரும் சிக்னல்களுக்கு நாம் பதில் அளிப்பதில் கவனமாக இருக்கவேண்டும். வேற்றுகிரக வாசிகள் மனித குலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் மனிதனை விட வளர்ச்சி அடைந்தவர்களாக இருக்கலாம். என்றார் அவர்.
 
செயற்கையாக உருவாக்கும் எந்திர மனிதர்கள் நாளை நம்மையே எதிர்க்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் அவர் விடுக்கத் தவறவில்லை.  மனித குல வரலாற்றில் செயற்கை எந்திர மனிதர்களை உருவாக்கியது பேரழிவுக்கு இட்டுச்செல்லும் நிகழ்வாக இருக்கும் வாய்ப்பும் உள்ளதாக அவர் கூறினார்.
 
உலகம் பெருவெடிப்பு நிகழ்வின் மூலம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு என்ன இருந்தது? என்ற கேள்வி எப்போதும் கேட்கப்படும். காலத்துக்கும் வெளிக்கும் ஆரம்பமும் முடிவும் இல்லை. பிரபஞ்சத்துக்கு எல்லை என்ற ஒன்று கிடையாது. மனித அறிவை வைத்து உலகம் உருவான விஷயத்தை விளக்கமுடியாது. எல்லா இயற்பியல் விதிகளும் அற்றுப்போன நிலை அது. காலமே அங்கே வளைந்துவிடும். அது இன்மைக்கு நெருக்கமானது. ஆனால் இன்மை அல்ல... என்று அவர் பதிலளித்திருக்கிறார். வடதுருவத்திற்கு ஒரு மைல் வடக்கே ஒரு புள்ளியைப் பற்றி கேட்பதும் பெருவெடிப்புக்கு முன்பு என்ன நடந்தது என்று கேட்பதும் ஒன்றுதான் என்பார் அவர்.
 
 
பிரபஞ்சவியலில் கருந்துளைகள் பற்றிய அவரது கருத்துக்கள் முக்கியமானவை. கருந்துளைகளுக்குள் ஈர்க்கப்படும் எதுவும் வெளியே வராது என்று கருதப்பட்டது. ஆனால் அவர் அப்படி இல்லை. சின்னதாய் கதிரியக்கம் கருந்துளைகளில் இருந்து வெளியே கசிகிறது என்றார். அத்துடன் கருந்துளைக்குள் ஈர்க்கப்பட்ட பொருள் சிதைந்த நிலையில் வெளியே தள்ளப்படலாம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
 
சக்கர நாற்காலியில் இருந்தாலும் கூட தன்னால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்றே ஸ்டீபன் ஹாங்கிங் நினைத்துவந்தார். தன்னால் செய்ய முடியாதது தான் செய்ய விரும்பாத விஷயங்களாகத்தான் இருக்கும் என்று சொல்லும் தன்னம்பிக்கை அவருக்கு உண்டு.
 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...