???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது 0 நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஸ்டீபன் ஹாக்கிங்- அறிவியல் உலகின் ஒளிபொருந்திய நட்சத்திரம் அணைந்தது!

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  01:29:24 IST


Andhimazhai Image
இங்கிலாந்தில் 1942 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர். தன் 76 வயதில் அவர் மரணமடைந்திருக்கிறார். தன் வாழ்நாளில் அவரளவுக்குப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்கள் மிகவும் குறைவே.
 
 
 வானவியலின் ஒளி பொருந்திய நட்சத்திரம் அவர். பிரபஞ்சவியல், குவாண்டம் இயற்பியல் ஆகியவை குறித்த ஆய்வுகள் இவருக்கு உலகளாவிய ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுத்தந்தன. பேரண்டத்தில் கருந்துளைகள் பற்றிய ஆய்வுகள், கருந்துளைகளுக்கும் வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்பு ஆகிய கருத்தாக்கங்கள்  அறிவியலாளர்களுக்கு ஒரு புதிய திறப்பை வழங்கின. இத்தனைக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் சராசரி  மாணவர்தான். கல்லூரி இறுதியாண்டில் வாய்மொழித்தேர்வில் தேர்வாளர்களிடம் தனக்கு முதல் கிரேடை வழங்கினால் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிடுவேன் என்றும் இரண்டாவது கிரேடு வழங்கினால் ஆக்ஸ்போர்டிலேயே படிப்பைத் தொடருவேன் என்று கூறினார். இது கிட்டத்தட்ட ஒரு சன்னமான மிரட்டல்தான். ஆனால் ஆச்சர்யமாக தேர்வில் அவருக்கு முதல் கிரேட் கிடைத்தது. 
 
 
 தனது இருபத்திரண்டு வயதில்  Amyotrophic Lateral Sclerosis என்னும் வினோதமான நரம்பு மண்டல முடக்கு நோயால் அவர் பாதிக்கப்பட்டார். இன்னும் இரண்டு வருடங்கள் மட்டுமே அவர் உயிர் பிழைத்திருப்பார் என்ற மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கினார். அரை நூற்றாண்டு காலம் வாழ்ந்தார். அவரை முடக்கிய அந்த கொடிய நோய்க்கும் இந்த உலகத்துக்கும் தான் யார் என்று நிருபித்தார். இந்த நோய் தாக்கியவர்களால் பேச முடியாது. கை கால் முடங்குவதோடு அல்லாமல் கழுத்துக்கு கீழ் மொத்த உடலும் முடங்கும் கொடிய நோய் அது. ஆனால் நோயின் கடுமைகளை தனது அறிவியல் மேதமைகளால் அவர் வென்றார். சைகைகளை கணினி மூலம் ஒருங்கிணைத்து அவர் பிறருடன் தொடர்பு கொண்டார். தன் எதிர்காலத்தை மேகங்கள் சூழ்ந்திருந்தன என்று நினைவு கூறும் ஹாக்கிங், நோய் தாக்கியபின்புதான் நிகழ்காலத்தில் வாழ்வது என்ற சூட்சுமத்தை அறிந்துகொண்டதாக பின்னாளில் நினைவுகூர்ந்தார். மரணத்தை வென்ற வாழ்வு அவருடையது. பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முயன்றவர்களில் ஆகப் பிரதான இடம் ஸ்டீபன் ஹாக்கிங்குக்குத்தான் உண்டு.
 
 
அபார நகைச்சுவை உணர்ச்சியும், உள்ளுணர்வும் நிரம்பியவர் ஸ்டீபன் ஹாக்கிங். தன் வாழ்நாளில் இரண்டு முறை திருமணம் புரிந்தவர். லூசி, ரோபர்ட், டிம் என மூன்று பிள்ளைகள் உண்டு. தனது தந்தையின் இறப்புச் செய்தியை நெகிழ்ச்சியுடன் அவர்கள்தான் உலகுக்கு அறிவித்தார்கள்.
 
 
 காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் (Brief History Of time), பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design) மற்றும் கருந்துளைகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், (Black Holes and Baby Universes and Other Essays) என்ற கட்டுரைத் தொகுப்பும் My Brief History என்கிற சுயசரிதையும் மேலும் பல அறிவியல் கட்டுரைகளையும் புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
 
 
 ''மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை. ஆனால் நான் இறப்பதற்கு அவசரப்படுபவன் இல்லை. நான் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.'' என்பது ஸ்டீபன் ஹாக்கிங்கின் அனுபவ மொழி. அவர் எழுத்துக்களிலிருந்தும் அவருடைய வாழ்விலிருந்தும் கற்றுக்கொள்ள நமக்கு நிறைய இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் இன்னும் அறியப்படாத கருந்துளைகளின் ஆழமான வெளிச்சத்தில் ஸ்டீபன் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார் என்றுதான் நாம் அவரது மரணத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
 
 
- சரோ லாமா 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...