அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   26 , 2021  11:03:50 IST

சென்னை கோடம்பாக்கம், புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோவிலில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைய துறை செயலர் சந்திரமோகன், இந்து சமய அறநிலைய துறை கமிஷனர் குமரகுருபரன், தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலன், சென்னை மண்டல இணை கமிஷனர் ஹரிப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
 
இதன்பின் அமைச்சர் பேசும்போது, தமிழகத்தில் உள்ள 3,087 கோவில்களுக்கு கண்காணிப்பு கேமரா மற்றும் களவு எச்சரிக்கை மணி பொருத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கு, 309 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
முதல் கட்டமாக, திருவிடைமருதுார், பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு அறை, 22 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து, சென்னை கோடம்பாக்கம், புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோவிலில், புதிய வடிவமைப்பில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறை, 22 சிலைகள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது.
 
விலை மதிப்பு மிக்க சிலைகள் பாதுகாப்பாக இருக்க, இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 3,௦85 கோவில்களில் விரைவில் கட்டி முடிக்கப்படும். தேவாரம், திருவாசகம் போன்ற ஆன்மிக வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
 
கொரோனா தொற்று முடிந்ததும், பக்தி சுற்றுலா அழைத்து செல்லப்படும். முதுநிலை கோவில்களின் தல வரலாறு புத்தகம் வெளியிடப்பட உள்ளது.  முதல்கட்டமாக, பழநி தண்டாயுதபாணி வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது என அமைச்சர் பேசினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...