???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொருள் இருப்பு அதிகம் வைத்திருக்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அபராதம்: தமிழக அரசு

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   26 , 2020  21:34:42 IST

பொருள் இருப்பு அதிகம் வைத்திருக்கும் ரேஷன் கடை பணியாளரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 
”ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள் இழப்பு, முறைகேடு மற்றும் இருப்பு அதிகம் வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பை, சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளரிடம் இருந்து வசூலிக்குமாறு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
 
ரேஷன் பொருட்களின் விற்பனை முனை எந்திரத்தையும், உண்மை இருப்பையும் சரிபார்க்கும்போது கூடுதல் இருப்பு காணப்பட்டால், ரேஷன் அட்டைதாரருக்கு தெரியாமல் கடைப்பணியாளர் போலி பட்டியல் தயாரித்ததாகவும், பொருள் விநியோகம் செய்யும்போது எடை குறைத்து கொடுத்ததாகவும் தான் கருத வேண்டும்.
 
உணவு பாதுகாப்புக்காக அதிக மானியத்துடன் வழங்கும் அத்தியாவசிய பொருட் களை உரியமுறையில் பயனாளிகளுக்கு வழங்காததும், எடைகுறைத்து விற்பது அல்லது போலிப் பட்டியல் வாயிலாக பொருட்களை திருடுவதும் தீவிர முறைகேடுகளாகும். இதனால்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் கூடுதல் இருப்பு நேர்கிறது. போலிப்பட்டியல் மூலம் அத்தியாவசிய பொருட்கள் திருடப்படும் குற்றம் போலவே இதுபோன்ற நேரத்திலும் அபராதத் தொகையை தொடர்ந்து வசூலிக்க உத்தரவிடப்படுகிறது.
 
அபராத தொகையை வட்டம் அல்லது மண்டல அலுவலர் உடனடியாக வசூலித்து அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும். போலி பட்டியலுக்கான அபராதத் தொகையை வசூலிக்க வழங்கப்பட்ட அதே நடைமுறை, பொருள் இருப்பு அதிகம் காணப்படும் இனங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...