![]() |
இலங்கையில் மீண்டும் அவசரநிலை - இரணில் பிரகடனம்Posted : திங்கட்கிழமை, ஜுலை 18 , 2022 09:36:42 IST
இலங்கைத் தீவு முழுவதிலும் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் தற்காலிக அரசு அதிபர் இரணில் விக்கிரமசிங்கே இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கை அரசின் அரசிதழில் நேற்றைய தேதியிட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பாதுகாப்பு, பொது ஒழுங்கைக் காப்பது, பொருள்கள்- சேவைகள் வழங்கலைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுக்காக இப்போது அவசரநிலை கொண்டுவரப்படுகிறது என இரணில் விக்கிரமசிங்கே அதில் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் நாடு முழுவதற்கும் இந்த அவசரநிலை செயல்பாட்டுக்கு வருவதாகவும் அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற அரசியல் கொந்தளிப்புப் போராட்டங்கள் காரணமாக, 14ஆம் தேதியன்று தலைநகர் கொழும்புவில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது நாட்டின் மற்ற பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்னர், கடந்த 9ஆம் தேதியன்று கொழும்புவை உள்ளடக்கிய மேல்மாகாணத்தில் மட்டும் ஊரடங்கும் நாடு முழுவதும் அவசரநிலையும் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. English Summary
State of Emergency declared in Sri Lanka
|
|