???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஸ்டான் லீ- சூப்பர் ஹீரோக்களின் தந்தை!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   13 , 2018  02:40:18 IST


Andhimazhai Image
 
ஸ்டான் லீ, மார்வல் காமிக்ஸ் நாயகர்களின் தந்தை மரணமடைந்து விட்டார். 1922-ல் நியூயார்க்கில் ருமேனியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர் இவர்.
 
ஆண்ட் மேன், அயர்ன்மேன், தோர், ஹல்க், ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ் டீம், எக்ஸ் மென் போன்ற புகழ்பெற்ற அதி நாயகர்களை உருவாக்கி உலவ விட்டவர். மார்வெல் தயாரிப்பில் வரும் எல்லா அதி நாயகர்கள் படங்களிலும் ஸ்டான் லீ ஒரு சின்ன பாத்திரமாகத் தோன்றுவார். அதோ பார் ஸ்டான் லீ என்பதற்குள் காணாமல் போய்விடும் காட்சிதான் அது.
 
1940களில் தொடங்கிய இவரது பணி 1960களில் மார்வல் காமிஸ் நிறுவனம் உருவாகியபோது உச்சத்தை அடைந்தது. 
 
“நான் ஆரம்பத்தில் ஓவியர்கள் வரைவதற்காக மைக்குப்பிகளை நிரப்பி வைப்பது, அவர்களுக்கு மதிய உணவு வாங்கிவருவது, பென்சிலால் எழுதப்பட்டவற்றை அழித்துத்தருவது போன்ற வேலைகளைத்தான் செய்தேன்,” என்கிற ஸ்டான்லீ பின்னாளில் தான் உருவாக்கிய அதிநாயகர்கள் உலகம் இப்படி பிரபலமாகும் என்று நினைக்கவே இல்லையாம். “ யாராவது இந்த புத்தகங்களை வாங்குவார்கள். நமக்கு சம்பளம் கிடைக்கும். அலுவலக வாடகை கட்டலாம் என்றுதான் இந்த பாத்திரங்களை உருவாக்கும்போது நினைத்தேன்” என்றார் ஸ்டான் லீ.
பிறகு அச்சிலிருந்து தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்று மார்வல் காமிக்ஸ் மகத்தான வளர்ச்சி அடைந்தது. இப்போது அவர் உருவாக்கிய பாத்திரங்கள் உலகமெங்கும் பிரபலம்.
 
இந்த பாத்திரங்களை உருவாக்கும்போது அவற்றுக்கு அதிகமான மானுட உணர்வுகளை அளித்ததுதான் அவற்றின் வெற்றிக்குக் காரணம். அயர்ன்மேனின் முகமூடியை விட அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் முகத்துக்குத்தான் அவர் முக்கியத்துவம் அளித்தார்.!
 
அவரது மரணத்தையொட்டி ஸ்பைடர்மேனும் அயர்ன்மேனும் ஹல்க்கும் மட்டுமல்ல கண்ணீர் விடுவது... உலகில் உள்ள அவரது ரசிகர்களுமே கண் கலங்குகிறார்கள்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...