???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேரளாவில் பழங்குடி அடித்துக்கொலை: 2 பேர் கைது, 5 பேரிடம் விசாரணை 0 பொறியியல் கலந்தாய்வுக்கு இனி நேரில் வரவேண்டியதில்லை: அமைச்சர் தகவல்! 0 பல்கலைகளில் பல கோடி ரூபாய் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு! 0 சென்னை மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல்! 0 கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு! 0 டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ ஆதரவு 0 ஜெயலலிதா பிறந்த நாள்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி 0 தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்! 0 ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி அரசியல் மாநாடு! 0 தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஜாமின் மனு தள்ளுபடி 0 தயாரிப்பாளர்கள் - டிடிஎஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி 0 புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு பாரதிராஜா ஆதரவு 0 அதிமுக எங்கள் கட்சி: டி.டி.வி.தினகரன் பொளேர்! 0 ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் 0 நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மெட்ரோ ரயில் ஜெயலலிதாவின் கனவா? ஸ்டாலின் கண்டனம்

Posted : திங்கட்கிழமை,   மே   15 , 2017  05:24:43 IST

பெற்று எடுக்காத பிள்ளைக்கு பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதா? என மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக முதல்வர், மத்திய அமைச்சர் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2007-ல் திமுக ஆட்சியின்போது 23-வது அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். சென்னையில் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில்கள் திமுகவுக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி எனவும் சுட்டிக்காட்டி உள்ளார். 
 
ஆனால், இத்திட்டத்தை தாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று “சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போல்” பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முதலமைச்சருக்கு கூச்சமாக இல்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியஅமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் “மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற  ஜெயலலிதாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது” என கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
எனவே, “பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடாமல், மெட்ரோ ரயில் திட்டம் திமுகவின் பிள்ளை என்பதை உணர வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...