செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம்
கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, விசைப்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம்
Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 22 , 2021 09:15:41 IST
கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, விசைப் படகோடு மூழ்கடித்துக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் - மீன்பிடி உரிமையின் அடிப்படையிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும் இழப்பீடுகள் எதுவும் கொடுக்கமாட்டோம் என இலங்கை கடற்படை அறிவிப்பதும் அடாவடியானது, அராஜகமானது எனக் கூறியுள்ளார். இலங்கை அரசின் இந்த அட்டூழியங்களை மத்திய பா.ஜ.க. அரசு தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்ப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
|