???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ் 0 வைகோவின் சிறை காவல் நீட்டிப்பு 0 படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கக்கோரி வேலைநிறுத்தம் 0 2,500 ரூபாயில் விமான பயணம்! 0 சேலம் உருக்காலை விற்பனை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 சென்னையில் டிடிவி தினகரனிடம் விசாரணை 0 அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் 0 பாஜக சதியால் கைது: நாஞ்சில் சம்பத் 0 தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை: தமிழிசை 0 லஞ்சப் புகார்: நள்ளிரவில் தினகரன் கைது 0 மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது: நீதிமன்றம் 0 புத்திசாலித்தான கேரக்டர் கொடுங்கள்: ஜோதிகா 0 நக்ஸல் தாக்குதல்: 4 தமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி 0 திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது 0 சுகேஷை எனக்குத் தெரியும்: தினகரன் ஒப்புதல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஊழல்வாதிகளை புனிதர்களாக்க வேண்டாம்: ஸ்டாலின்

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   20 , 2017  08:14:42 IST

ஊழல் பாவக்கறை படிந்த அதிமுகவின் இரு அணிகளையும் புனிதர்களாக்க வேண்டாம் என மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் மீண்டும் ஒருமுறை ஊழல் ராஜ்ஜியத்தை ஒருங்கிணைந்து நடத்த சதித் திட்டம் போடுகின்றனர். ஒரு ஊழலை வெளியேற்றிவிட்டால், மற்றவர்களின் ஊழல்கள் மறைக்கப்படும், அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தை கொடுத்தது யார்? வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை சுயநல அரசியலுக்குப் பயன்படுத்த முற்படுபவர்கள் யார்? ஊழல் புகாருக்குள்ளான அதிமுகவின் இரு அணிகளுக்கும் வாக்குறுதி கொடுத்திருப்பது யார் என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது.

குற்றச்செயலில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்ட ஒருவரது வாக்குமூலத்தின்பேரில் டெல்லியில் வழக்குப்பதிவு செய்தது சரி என்றால், ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா விவகாரத்தில் இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? ஆண்டது போதும், தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும் என அதிமுகவின் இரு அணிகளையும் திமுக சார்பில் எச்சரிக்க விரும்புகிறது. முறைகேடு புகார்களுக்குள்ளான முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது ஒளிவுமறைவற்ற வகையில் மேல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...