???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   16 , 2019  22:18:27 IST

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் செயல்பாடுகளை விமர்சித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தண்ணீரின்றி தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில், ஆக்கப்பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெறாமல், கட்சியின் சொந்த பஞ்சாயத்தை மட்டும் பேசிவிட்டு திரும்பியிருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொடுத்த கோரிக்கை மனுவை சற்று வெட்டி ஒட்டி மீண்டும் பிரதமர் மோடியிடம் அளித்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். சுமார் 17 ஆயிரத்து 350 கோடி ரூபாய் நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், மேகதாது விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், முதலமைச்சர் கொடுத்த மனு “அலட்சியங்களின்” ஒட்டு மொத்த “அலங்காரமாக” இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை நிதி அயோக் கூட்டத்தில் முறைப்படி எதிரொலிக்காமல், அடகு வைத்துவிட்டு வந்துள்ளதாக  ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...