???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன் - மு. க. ஸ்டாலின்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   14 , 2018  02:44:29 IST

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் உட்பட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 
 
செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் டி.கே.எஸ்.இளங்கோவனால்  வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
 
தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன். அனைவரும் தலைவரை இழந்திருக்கிறீர்கள். மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது கருணாநிதியின் முடிவு. மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன். விதிமுறைப்படி இடம் கொடுக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் கூறினார். ஆனால் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். மெரினாவில் இடம் கிடைத்ததின் வெற்றி  வழக்கறிஞர் குழுவுக்குதான் சேரும், அவர்களுக்கு நன்றி. பெரிய சோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி நீதிமன்ற தீர்ப்பு என பேசினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...