???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஈராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்! 0 பாஜக பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது: தமிழிசை சவுந்தரராஜன் 0 குக்கர் சின்னம் வழக்கு: விரைந்து விசாரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கை 0 ஜி.எஸ்.டி. திருத்தியமைக்க 10 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம் 0 பாஜகவுடன் கூட்டணியும் இல்லை; ஆதரவும் இல்லை: முதலமைச்சர் 0 டிஜிபி வளாகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயற்சி 0 மீண்டும் மணல் குவாரிகள்: நாளை டெண்டர் விடுகிறது தமிழக அரசு! 0 ரத யாத்திரை எதிர்ப்பு போராட்டம்: திமுக எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு 0 144 தடை மத ஊர்வலங்களுக்கு பொருந்தாது: ஹெச்.ராஜா 0 விஸ்வரூபம் எடுக்கும் பேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம்! 0 அ.தி.மு.க கொடிக்கம்பத்தில் பா.ஜ.க கொடி! 0 மியான்மர் அதிபர் திடீர் ராஜினாமா! 0 ம.நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் 0 முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே நடராஜனின் உடல் இன்று மாலை அடக்கம்! 0 கடைசி பந்தில் சிக்சர்: தினேஷ்கார்த்திக்கு மியாண்டட் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜக அரசின் மொழிப் பாகுபாடு: ’தமிழ்நாடு இல்லம்’ பெயர் மாற்றம் கூடாது - ஸ்டாலின்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   04 , 2018  23:56:46 IST


Andhimazhai Image

 “பாஜ அரசின் மொழிவெறித் தூண்டுதலால் ‘தமிழ்நாடு இல்லம்’ என்பதை மாற்றம் செய்ய துணை போகக்கூடாது” என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:


இந்தியாவின் தலைநகர் டெல்லியில், தமிழக அரசின் சார்பில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் விருந்தினர் இல்லத்திற்கு வைக்கப்பட்டிருந்த ‘தமிழ்நாடு இல்லம்’ என்ற பெயரை, “வைகைத் தமிழ் இல்லம்”, “பொதிகைத் தமிழ் இல்லம்” என்று பெயர் மாற்றம் செய்து, “தமிழ்நாடு” என்ற பெருமையும், அருமையும் மிக்க சொல்லை மறைக்கத் துணிந்துள்ள அ.தி.மு.க அரசுக்கு, தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். “தமிழ்நாடு”, ஏழரை கோடி தமிழர்களின் உணர்வுடன் ஒன்றியிருக்கின்ற, உயிரோட்டமுள்ள ஒரு உயரிய சொல். அந்த உணர்வைச் சிதைத்திடும் வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தின் பெயரை மாற்றி, டெல்லியில் உள்ள தனது மேலாதிக்க எஜமானர்களை மகிழ்வித்து, தனது பணிவு மிகுந்த விசுவாசத்தை வெளிக்காட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பது மிகுந்த வேதனைக்குரியது.

டெல்லியில் பல்வேறு மாநிலங்களின் சார்பில் கேரளா இல்லம், பீகார் இல்லம் என்றெல்லாம் விருந்தினர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், “தமிழ்நாடு இல்லம்” என்ற கம்பீரமான பெயர் மட்டும் இருக்கக்கூடாது என மத்தியில் உள்ள பாஜ அரசு விடுக்கும் மிரட்டலுக்கு அஞ்சி நடுங்கி, தமிழக மக்களின் இதயங்களில் நிறைந்திருக்கும் உணர்வுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விபரீத விளையாட்டை நடத்தியிருக்கிறார்.

சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர்சூட்டி, வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியவர் அண்ணா, ‘தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்’, என்று தமிழ் உலகத்தில் புகழப்படுகிறார். தமிழ்நாடு இல்லம் என்ற பெயரின் அருமை பெருமைகளையும், தமிழர்களுக்கு அதனால் தலைநகர் டெல்லியில் கிடைத்த தனிச்சிறப்பினையும் மறந்துவிட்டோ அல்லது அந்த வரலாறு குறித்த அறியாமையாலோ, இப்படியொரு பெயர் மாற்றத்தை நிகழ்த்தி, தமிழகத்திற்கும் அண்ணாவுக்கும், உலகளாவிய தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்த அரசு மாபெரும் துரோகம் செய்திருக்கிறது.அதுமட்டுமின்றி, தமிழர்களின் பாரம்பரியமான, ஆழ்ந்த உணர்வுகளின் மீது மத்திய பாஜ அரசின் மொழி வெறித்தூண்டுதலால் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்றே இச்செயலை எண்ணுகிறேன். ஆகவே, உப்புச்சப்பு இல்லாத காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்காமல், டெல்லியில், திராவிட இயக்கத்தின் சாதனையாக இருக்கும் “தமிழ்நாடு இல்லம்” என்ற பெயரை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றவோ கூடாது என்று வலியுறுத்தும் அதேநேரத்தில், புதிய பெயர் சூட்டுவிழா என்ற திரைமறைவு காரணங்களைக் கூறி, டெல்லியில் “தமிழ்நாடு” என்ற பெயரைப் பார்க்க விரும்பாதவர்களுக்கும், அந்த அரிய பெயரை உச்சரிக்கக் கூச்சம் கொள்பவர்களுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிபணிந்து துணைபோக வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.’’ click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...