![]() |
டெல்லி பயணம் எப்படி இருந்தது முதல்வரே? ஸ்டாலின் கேள்விPosted : புதன்கிழமை, ஜனவரி 20 , 2021 11:40:59 IST
சசிகலா சிறையில் இருந்து வருகிறார் என்றவுடன் பதறியடித்து கொண்டு பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து காப்பாற்றும்படி கோரிக்கை வைத்தீர்களா? என முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் பழனிசாமி தமிழகம் திரும்பினார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பயணம் எப்படி இருந்தது முதலமைச்சரே? என கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் பிரச்சினை, நீட் போன்ற மக்களின் பிரச்சினைகளை எல்லாம் கண்டு கொள்ளாத தாங்கள், சசிகலா வருகிறார் என்றவுடன் பதறியடித்து மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து காப்பாற்றும் படி கோரிக்கை வைத்தீர்களா? என விமர்சித்துள்ளார்.
|
|