???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சீன அதிபர்- பிரதமர் மோடி பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது பெருமை: ஸ்டாலின் அறிக்கை

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   08 , 2019  01:09:29 IST


Andhimazhai Image

சீன அதிபரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நடத்தும் இருநாட்டு நல்லுறவு பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை என்று ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

 

அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

 

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என மானுடத்திற்கு அரிய தத்துவம் தந்தவர் புரட்சி நாயக்கர் மாவோ. முத்தமிழறிஞர் கலைஞரால் முத்தான தமிழில் ஏற்றி போற்றி பாராட்டி புகழப்பட்ட புரட்சி நாயக்கர் மாவோ. உலகத்தையே திரும்பி பார்த்திட வைத்தது சீனப் பெருந்தலைவர் மாவோ நடத்திய சீனப்புரட்சி. சீனப்புரட்சி தான் பல நாடுகளில் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.



அத்தகைய சீன தேசத்தின் அதிபர் தமிழகத்திற்கு வருவது பெருமைக்குரியதாகும். சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுக பட்டினமான விளங்கியது மாமல்லபுரம். புராதன பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பன்னாட்டு உறவுகள், வணிகத் தொடர்புகள் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. சீன அதிபரின் வருகையை திமுக சார்பில் வருக வருக என்று மனமார வரவேற்கிறேன். இந்தியா - சீனா நல்லுறவுப் பேச்சுவார்த்தையை நடத்த தமிழகத்தை தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றி.



சீன அதிபரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நடத்தும் இருநாட்டு நல்லுறவு பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை.

 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...