???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   20 , 2019  23:54:01 IST

கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என கீழடி 4-ஆம் கட்ட ஆய்வில் தெரியவந்தது தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்க்கும் ஒன்று என கூறியுள்ளார்.

இந்த அரிய தருணத்தில் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஆகியோருக்கு பாராட்டுகளையும், வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

கீழடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய எழுத்தாளரும், மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசனையும் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். கீழடி அகழாய்வு இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது, மதுரையில் தொல்லியல் துறை அலுவலகம், கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் ஆகிய 3 கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...