???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0  74வது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து  0 இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற வேண்டும்: ஸ்டாலின்  0 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி  0 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க சி.பி.ஐ. மனு 0 ஆளுநர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் 0 தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பத்திரிகைகள் சந்தித்து வரும் கடும் நெருக்கடிநிலை: மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

Posted : வியாழக்கிழமை,   மே   21 , 2020  22:23:17 IST

பத்திரிகைகள் சந்தித்து வரும் கடும் நெடுக்கடி நிலை குறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'இத்தகைய நெருக்கடியான நேரங்களில், தக்க நேரத்தில் சரியான தகவல்கள் குடிமக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய அரசும், ஊடகங்களும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும். இதில் தவறு நேர்ந்தால் அது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை விளைவிப்பதோடு, அதுவும் தற்போதையச் சூழலில், இதுநாள் வரையிலான ஊரடங்கின் பயனையும் ஒன்றுமற்றதாக்கி விடக்கூடும்.

கடந்த 2 மாத காலமாக பொருளாதாரம் முடங்கியுள்ள சூழ்நிலையில், செய்தித்தாள் நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதன் வாழ்வாதாரத்தையே கேள்விக்குரியதாக்கிவிட்டது. விளம்பர வருவாய் இழப்பு மற்றும் கோவிட்௧9 தொற்று காரணமாக வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாகச் செலவினங்களை ஈடு செய்ய முடியாதது இந்தத் துறைக்குக் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தக்க உதவிகள் வழங்கப்படாவிடில், இத்துறையில் பணியாற்றும் 30 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பது என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பக்கங்களைக் குறைத்தல், பணியாளர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் பதிப்புகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் கூட, நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு இப்போது தீர்வுகாணப்படாவிடில், செய்தித்தாள்கள் தொடர்ந்து செயல்பட மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாகிவிடும்.

பல்வேறு செய்தித்தாள் நிறுவனங்களின் தலைமையோடு நான் கலந்துரையாடியபோது பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில், தங்களது உடனடி நடவடிக்கைக்காக கீழ்காணும் முக்கியப் பரிந்துரைகளை முன்வைக்கிறேன்.

* செய்தித்தாள் நிறுவனங்களின் சேவை எவ்விதத் தடையுமின்றித் தொடர, அவர்களது நிதிச் சுமையைக் குறைக்கும் உடனடிச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* செய்தித்தாள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பிற மூலப்பொருட்களுக்கான சுங்க வரி ஆண்டு முழுவதும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

* பல ஆண்டுகளாக பி.ஓ.சி. கணிசமான தொகையை செய்தித்தாள் நிறுவனங்களுக்கு நிலுவை வைத்துள்ளது. அவை உடனடியாக வழங்கப்பட்டால், சமூக விலகல் உள்ளிட்ட நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கப்படுவதால் உயர்ந்துள்ள செயல்முறைச் செலவுகளை ஈடுசெய்ய முடியும்.

* தனியாரிடம் இருந்து வரும் விளம்பர வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடுசெய்ய, அவசியத் தகவல்களை வெளியிட பி.ஓ.சி.யால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும்.

* அதேசமயம், நமது செய்தித்தாள் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அரசின் அறிவிப்புகளை வெளியிட அச்சு ஊடகங்களின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

இப்பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு, நெருக்கடியான இச்சமயத்தில், செய்தித்தாள் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்குச் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்திடும் என்னும் நம்பிக்கையில் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.'

எனக் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...