???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  00:16:16 IST

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தால் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாய் விளங்கும் ஏரிகளை முறையாக பராமரிக்காமல் விட்டதே இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

குடிநீர் திட்டங்களை ஏற்படுத்துவதிலும், கடல் நீரை குடிநீராக்கும் முயற்சியிலும் உள்ளாட்சித்துறை அக்கறை காட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின்,  இதனால் கோடை வெயிலில் தாய்மார்கள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கவும், கூட்டுக்குடிநீர் திட்டங்களை முறையாக பராமரிக்கவும் இந்த அரசு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், கிருஷ்ணா நதி நீரைப் பெறவும், காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறவும் தமிழக அரசு தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பொதுமக்களின் துன்பங்களை முதலமைச்சரோ, உள்ளாட்சித்துறை அமைச்சரோ கண்டுகொள்வில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். எனவே தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட வேண்டும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பொதுமக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...