???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயருடன் அரசாணை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   14 , 2019  23:06:37 IST

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட புகார் அளித்த பெண் விவரங்களை தமிழக அரசு மீண்டும் வெளியிட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக, அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் தொடக்க நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக முதன் முதலாக புகார் அளித்தப் பெண்ணின் பெயரையும் அவரது முகவரியையும் மாவட்டக் காவல்துறை வெளியிட்டது.
 
பாலியல் விவகாரங்களில் பாதிக்கப்படும் பெண்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளநிலையில், அதனை மீறும் வகையில் மாவட்டக் காவல்துறை செயல்பட்டிருந்தது.
 
இந்தச் செயலுக்கு கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மன்னிப்பு கோரியிருந்தார். இதுதொடர்பாக, மாநில பெண்கள் நல வாரியம் விளக்கம் கேட்டிருந்தது. காவல்துறையின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
 
இந்தநிலையில், இன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி மாநில உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அந்த அரசாணையிலும் பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்ணின் பெயர், அவரது வீட்டின் முகவரி, அவரது சகோதரரின் பெயர் ஆகியவை இடம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக கடும் கண்டனங்கள் எழுகின்றன.
 
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ‘பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு! இனியாரும் புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டுகிறதா?  குற்றவாளிகளைக் காப்பாற்ற தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம்’ என்று பதிவிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...