???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஸ்டாலின்

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   09 , 2018  18:49:48 IST

நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
சென்னை திருவல்லிகேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் காவல் துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது . எச்.ராஜா, எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுத்தது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டு பெண்களை தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவை தமிழக காவல்துறை கைது செய்யவில்லை.  நக்கீரன் கோபால் கைது.  சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்தார். 
 
தொடர்ந்து பேசிய அவர்,  நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும்  ஆளுநர் நேரம் கொடுத்தால் நக்கீரன் கோபால் விவகாரம் குறித்து பேசுவோம் எனத் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...