???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   24 , 2019  22:49:41 IST

குடிநீர் பஞ்சத்தை போக்க கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், அரசிடம் நிதி, திட்டம், தொழிற்சாலை, வேலைவாய்ப்பு, சட்டம், நீதி என எல்லாவற்றிற்கும் பஞ்சம் , இப்போது தண்ணீருக்கும் பஞ்சம் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் உள்ளிட்டவர்கள் தண்ணீர் பிரச்சனை குறித்து கவலை படாததால் தான் மக்கள் சாலையில் இறங்கி போராடுகின்றனர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தர்.

தொடர்ந்து பேசிய ஸ்டலின் மழைக்காக யாகம் நடத்துவது தவறு என நான் வாதாடவில்லை, ஏரிகளின் நீர் மட்டம் குறைந்துகொண்டே வந்த நிலையில், தண்ணீர் பஞ்சம் வரும் என்று சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் அரசு எதையும் செய்யவில்லை. பதவியை காப்பாற்றி கொள்ளவே அதிமுக யாகம் நடத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தலை சந்திக்காமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது, திமுகவினர் எதிர்ப்பார்ப்பது நடக்கப்போகிறது என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவில்லையென்றால் தமிழக சிறைகளை நிரப்பும் அளவிற்கு மிகப்பெரிய போராட்டத்தை திமுக முன்னெடுக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...