???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   25 , 2020  06:01:04 IST

பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பூரணசுந்தரிக்கு ஐ.ஏ.எஸ் பணியை வழங்காமல் ஐ.ஆர்.எஸ். பணி வழங்கப்பட்டிருப்பது, இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பூரணசுந்தரி ஆட்சிப் பணி தேர்வில் அகில இந்திய அளவில் 286-வது இடம் பெற்றார். இவருக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கப்படாமல் இந்திய வருவாய்ப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூரணசுந்தரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளை, மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22-ம் நாளுக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில், பூரணசுந்தரிக்கு ஓ.பி.சி பிரிவின் அடிப்படையிலும் மாற்றுத்திறனாளிக்குரிய பணியிடத்தின் அடிப்படையிலும் ஐ.ஏ.எஸ். பணியை வழங்காமல் ஐ.ஆர்.எஸ். பணி வழங்கப்பட்டிருப்பது, இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ள பூரணசுந்தரிக்கு திமுக துணை நிற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...