???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சந்திர சேகரராவிடம் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும்படி வலியுறுத்திய ஸ்டாலின்!

Posted : திங்கட்கிழமை,   மே   13 , 2019  21:21:28 IST

மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சியை அமைக்கும் முயற்சியில் சந்திர சேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் ஒவ்வொரு மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவு திரட்டி விருகிறார். கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனை அவர் சந்தித்து பேசினார். இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் - சந்திர சேகர ராவ் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

அப்போது கூட்டாட்சி அமைக்க ஸ்டாலினிடம் ராவ் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு ஸ்டாலின் தரப்பில் சந்திர சேகர ராவ் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்கள் எவரையும் சந்திக்காமல் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திர சேகர ராவ் புறப்பட்டுச் சென்று விட்டார்.

சந்திர சேகர ராவின் முயற்சிக்கு பெரிய அளவில் பலன் ஏதும் கிடைக்கவில்லை. முன்னதாக உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை ராவ் சந்திக்க முயன்றார். ஆனால் சந்திப்பு நடக்கவில்லை. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் இருந்தும் நல்ல பதில் கிடைக்கவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும்தான் சந்திர சேகர ராவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...