???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அளவுகளுக்குள் அடங்காத ஆளுமை! - எஸ். எஸ். சிவசங்கர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2018  08:49:20 IST


Andhimazhai Image
1939 ஆம் ஆண்டு. கலைஞருக்கு 15 வயது. 'மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்தி வந்தார். ஏற்கனவே முந்தைய ஆண்டிலேயே இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியதால் பிரபலம் அவர். 
 
கலைஞரை தேடி ஒரு கதர் சட்டைக்காரர் வந்தார். மெலிந்த தேகத்தோடு இருந்த கலைஞரை பாரத்தவருக்கு ஆச்சரியம். "நீங்கள் தான் மாணவ நேசன் நடத்துகிற கருணாநிதியா?" என்று கேட்கிறார். ஆம் என்கிறார் கலைஞர்.
 
"மாணவர்களை எல்லாம் ஒன்றுபடுத்தி சுதந்திரம், சமாதானம், சமத்துவம் ஆகியவைகளுக்காக அணி வகுத்து குரல் எழுப்ப வேண்டும். அதற்குப் பாசறையாக மாணவர் சம்மேளனம் என ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அமைப்பாளராக நீங்கள் இருந்து திருவாரூர்ப் பள்ளியில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்." என்று அந்த கதர் சட்டைக்காரர் கலைஞரிடம் கேட்டுக் கொண்டார்.
 
ஏற்கனவே இந்தி எதிர்ப்பு அரசியலில் சூடாய் இருந்த கலைஞருக்கு, சுதந்திரம் சமாதானம் சமத்துவம் என்ற வார்த்தைகள் வேகத்தைக் கூட்டின, உணர்ச்சியை ஏற்றின. 
 
சம்மேளனத்தின் அமைப்பாளர் ஆக ஒப்புக் கொண்டார். இருநூறு உறுப்பினர்களை இணைத்தார். காங்கிரஸ் சார்பானதென என எண்ணி காங்கிரஸ் மாணவர்களும் இணைந்தனர். பொது மாணவர்களும் இணைந்தனர். ஆனால் சம்மேளனத்தின் போக்கு பிடிபடவில்லை கலைஞருக்கு.
 
கதர் சட்டைக்காரர் சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தி கலைஞரை செயலாளர் ஆக்கினார். இதுவே நீடித்தால் எங்கு போய் நிற்போம் காங்கிரஸிலா, கம்யூனிஸ்ட்டிலா என்ற சந்தேகம் கலைஞருக்கு தோன்றியது. அந்த நேரத்தில் தான் "தமிழ் வாழ்க, இந்தி வளர்க" என்பதை சம்மேளனத்தின் கோஷமாக வைக்கலாம் என்றார் ஒரு காங்கிரஸ் நிர்வாகி.
 
அவ்வளவு தான். கலைஞர் முடிவெடுத்தார். சம்மேளனம் கலைக்கப்பட்டது. "தமிழ் மாணவர் மன்றம்" தோற்றுவித்தார். 15 வயதிலேயே பயணிக்க வேண்டிய பாதையை தெளிவாக முடிவு செய்தார். கொள்கை தெளிவு.
 
1959 ஆம் ஆண்டு தி.மு.க சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது. அதுவரை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க போட்டியிட்டிருக்கவில்லை.
 
கலைஞர் தான் வேட்பாளர்கள் தேர்வு குழுவின் தலைவர். மொத்தமுள்ள 100 இடங்களில் 90 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு கலைஞர் திட்டமிட்டார். 
 
காங்கிரஸ் 100 இடங்களிலும் போட்டியிட்டது. கம்யூனிஸ்ட் 17 வேட்பாளர்களை நிறுத்தியது. ஜனசங்கம் 15 வேட்பாளர்களையும், சோஷலிஸ்ட் கட்சி 18 வேட்பாளர்களையும் நிறுத்தியது. 
 
முதல் தேர்தலிலேயே 90 வேட்பாளர்களை நிறுத்தவது உகந்ததல்ல என்று பேரறிஞர் அண்ணா நினைத்தார். ஆனால் கலைஞர் அதில் உறுதியாக இருந்தார். 
 
பேசிப் பார்த்த அண்ணா ஒரு கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வீசி எறிந்து விட்டார் கோபத்தில். ஆனால் அது நடிப்பு. அப்படியாவது கலைஞர் இறங்கி வருவார் என்று எதிர்பார்த்தார் அண்ணா. ஆனால் இரவெல்லாம் பேசி கலைஞர் அனுமதி பெற்றார், 90 வேட்பாளர்களுக்கு.
 
"இதில் எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?", அண்ணா கேட்டார். "40 பேர் வெற்றி பெறுவார்கள்", என்றார் கலைஞர். " அப்படி வெற்றி பெற்றால், கணையாழி அணிவிக்கிறேன்", என்றார் அண்ணா. காரணம், அண்ணாவுக்கு நம்பிக்கை இல்லை. 
 
தேர்தல் முடிவுகள் வந்தன. தி.மு.க வேட்பாளர்கள் 45 இடங்களில் வெற்றி பெற்றார்கள். அண்ணாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. கலைஞருக்கு கணையாழி அணிவித்து பெருமைப்படுத்தினார் அண்ணா. 
 
தன் முடிவில் நம்பிக்கைக் கொண்டு, தலைவரிடமே வாதாடி அனுமதி பெற்று, வெற்றியும் கண்ட தலைமைப் பண்பு. 
 
அந்தத் தலைமைப் பண்பு தான் கலைஞரது அய்ம்பது ஆண்டு கால தலைமையின் வெற்றி ரகசியம்.
 
ஒரு இயக்கத்தின், அதிலும் ஜனநாயக இயக்கத்தின் தலைவராக அய்ம்பது ஆண்டுகள் பணியாற்றுவது என்பது மாபெரும் பணி. அதிலும் சமூகநீதிக்காக, மொழிக்காக, மாநில சுயாட்சிக்காக என்று கொள்கை வழி போராடுகிற இயக்கத்தின் தலைவராக அய்ம்பது ஆண்டுகள் பணியாற்றியது நெருப்பாற்றில் நீந்தியதற்கு ஒப்பாகும்.
 
அண்ணாவின் மறைவிற்கு பிறகு தலைமை பொறுப்பை ஏற்றது, எம்.ஜி.ஆர் பிரிவால் கட்சியில் ஏற்பட்ட சரிவு, நெருக்கடி நிலையை எதிர்த்து குரல் கொடுத்தது, அதனால் ஆட்சியை பறி கொடுத்தது, பொய்யான ஊழல் புகார்கள் - கூட்டணிக் குழப்பம் - இந்திரா மறைவு - எம்.ஜி.ஆர் உடல் நலிவு ஆகியவற்றால் மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது, பதிமூன்று ஆண்டுகள் எதிர்கட்சியாக சமாளித்தது, அதற்கு பிறகு அமைத்த ஆட்சியையும் ஒன்றரை ஆண்டுகளில் கலைப்புக்கு ஆளானது, ராஜீவ்காந்தி கொலைப்பழியை சுமந்தது, வைகோவால் கட்சியில் ஏற்பட்ட பிரிவு, ஜெயலலிதாவின் அடக்குமுறைகளை சந்தித்தது, அடுத்த நாடான இலங்கையில் நடந்த தமிழின படுகொலைக்கான பொய் பழியை சுமந்தது என அவர் இந்த அய்ம்பது ஆண்டு காலத்தில் சந்தித்த சோதனைகள் ஏராளம்.
 
இத்தனை சோதனைகளை எதிர்கொண்ட வேறொருவராக இருந்தால் அரசியலை விட்டே ஓடிப் போயிருப்பார்கள் அல்லது பலமுறை மாரடைப்புக்கு ஆளாகி இருப்பார்கள்.
 
ஆனால், எதையும் தாங்கும் இதயத்தோடு அய்ம்பது ஆண்டுகள் தி.மு க என்ற இயக்கத்தை வழி நடத்தும் கலைஞருக்கு ஈடும் இல்லை, இணையும் இல்லை. கலைஞர்,  அளவுக்களுக்குள் அடக்க முடியாத ஆளுமை!
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...