???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போர்க்குற்ற விசாரணை: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது

Posted : சனிக்கிழமை,   ஜுலை   09 , 2016  00:17:23 IST

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ராணுவத்துக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வெளிநாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கொழும்பு நகர் அருகே புத்த மதத் துறவிகளின் நிகழ்ச்சியொன்றில் அதிபர் சிறீசேனா, பங்கேற்றார். அவர்கள் முன்பு அவர் பேசியதாவது:

இலங்கை இறுதிக்கட்டப் போர் குறித்து எங்கு வேண்டுமானாலும் விவாதிக்கப்படலாம். ஆனால், இலங்கையின் அதிபராக நான் இருக்கும் வரை, வெளிநாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளை உள்நாடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விசாரிப்பதற்காக அனுமதிக்க மாட்டேன். நாட்டின் சுதந்திரத்துக்கும், இறையாண்மைக்கும் எதிராக எந்தச் செயலையும் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று சிறீசேனா பேசினார்.

முன்னதாக, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சர்வதேச நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி, இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. அந்நாட்டில் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில், பொதுமக்கள் உள்பட 40,000 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...