அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை எம்பி அடித்து கொல்லப்பட்டார்: பிரேத பரிசோதனையில் தகவல்

Posted : சனிக்கிழமை,   மே   14 , 2022  10:53:16 IST

போராட்டக்காரர்கள் அமரக்கீர்த்தியை தாக்கியதால் அச்சமடைந்த எம்பி, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மே 9ம் தேதி கொழும்புவில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜபக்சேவின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டதில் இரு தரப்பினருக்கும் இடையில் வன்முறை வெடித்தது. அந்த வன்முறையின்போது ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்துள்ளார். அவரது பாதுகாவலரும் சடலமாக மீட்கப்பட்டார். தனது காரை மறித்த போராட்டக்காரர்களை நோக்கி அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அவரை தாக்கியதால் அச்சமடைந்த எம்பி, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இறந்த எம்பி அமரக்கீர்த்தியின் பிரதே பரிசோதனை வெளியாகியுள்ளது. அதில் அவர் துப்பாக்கியால் சுட்டு இறக்கவில்லை, போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என தெரிய வந்துள்ளது. போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...