???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2020  02:49:15 IST


Andhimazhai Image

இலங்கையில் நடந்துமுடிந்த ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் இடைக்கால பிரதமராக இருக்கும் மகிந்த இராஜபக்சவின் கட்சியானது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. ஈழத்தமிழர் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னைய தேர்தலைவிட பின்னடைவைச் சந்தித்துள்ளது.

 

நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர் 196 இடங்களும் அதிக வாக்குகள் பெற்ற கட்சிகளுக்கான தேசியப் பட்டியல் வாய்ப்பு மூலம் மீதமுள்ள இடங்களும் நிரப்பப்படும். இதில், மகிந்த இராஜபக்சவின் இலங்கை பொதுமக்கள் முன்னணி 128 இடங்களைப் பிடித்ததுடன் தேசியப்பட்டியலில் 17 இடங்களைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது.

 

  இரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத்தலைவராக இருந்து பின் பிரிந்து சென்று சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி என்கிற (கட்சி)அணியைத் தொடங்கி இருந்தார். அந்த அணிக்கு 47 இடங்கள் மற்றும் 7 தேசியப்பட்டியல் இடங்கள் கிடைத்து 54 நா.ம. உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

 

  விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டு, ஈழத்தமிழர் கட்சிகளின் ஒரே கூட்டமைப்பாக இருந்துவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில்) 9 இடங்களையும் ஒரு தேசியல் பட்டியல் இடத்தையும் என மொத்தம் 10 இடங்களைப் பிடித்துள்ளது. இதுவே கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு 16 நா.ம. உறுப்பினர்கள் கிடைத்தனர். கூட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்னையால் சில கட்சிகள் வெளியேறியும் சில அதனுடன் சேர்ந்தும் தமிழீழத் தாயகப் பகுதியில் புதிய அணிச் சேர்க்கைகள் ஏற்பட்டன.

 

   இடதுசாரிக் கொள்கையைப் பேசினாலும் சிங்கள இனவாதத்தை முன்னிறுத்தும் மக்கள் விடுதலை முன்னணி- ஜே.வி.பி. கட்சியானது, தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் போட்டியிட்டு, இரண்டு உறுப்பினர் இடங்களைப் பிடித்துள்ளது. ஜே.வி.பி.க்கு தேசியப் பட்டியல் மூலம் ஒரு இடம் கிடைத்துள்ளது. சிங்களவர் தரப்பில் சரிபாதி அளவுக்கு இலங்கையின் ஆண்ட கட்சியாக இருந்துவந்த ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட பிடிக்கமுடியாமல் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஜே.வி.பி.யைவிடக் குறைவான வாக்குகளையே அதனால் பெறமுடிந்துள்ளது.

 

  பிற ஈழத்தமிழர் கட்சிகளைப் பொறுத்தவரை, டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி- ஈ.பி.டி.பி. இரண்டு இடங்களையும் தனியாகப் போட்டியிட்ட இடங்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தலா ஒரு இடங்களையும் பிடித்துள்ளன.

 

சிங்களவர் செறிந்துவாழும் தென்னிலங்கையில் புத்தளத்தில் முஸ்லிம் தேசியக் கூட்டணி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் இடமும் கிடைத்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சரும் கருணாவின் முன்னைய கூட்டாளியுமான பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேசுவரன் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன தலா ஒரு இடத்தைப் பெற்றுள்ளன. கூட்டமைப்பிலிருந்து முதலில் பிரிந்துவந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியானது ஓர் இடத்தையும் தேசியப் பட்டியல் மூலம் ஓர் இடத்தையும் என இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது.

 

-இர.இரா.தமிழ்க்கனல்click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...