???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! 0 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி 0 துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி 0 காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி 0 “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து 0 இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் 0 ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபட்சவை எதிர்த்து போட்டியிட அமைச்சர் திடீர் முடிவு

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   22 , 2014  00:25:18 IST

இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா, ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக எதிர்க் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளார். ஏற்கெனவே, ஆளும் கூட்டணியிலிருந்து அந்த நாட்டின் தேசிய பாரம்பரியக் கட்சி விலகியுள்ளது. இந்நிலையில், கட்சியில் இரண்டாவது இடத்தை வகிப்பவர் எனக் கூறப்பட்டு வந்த ஸ்ரீசேனா, கட்சியிலிருந்து விலகியிருப்பது ராஜபட்சவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசேனா, ‘எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி என்னைத் தேர்ந்தெடுத்துள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை வீழ்த்தியதிலிருந்தே, அதிபர் ராஜபட்சவின் அரசு தவறான பாதைக்குச் செல்லத் தொடங்கிவிட்டது. அரசு நிர்வாகம் முழுவதும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ளது. நாடு மெல்ல மெல்ல சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. சட்டத்தின் ஆட்சி இங்கு நடைபெறவில்லை. ராஜபட்சவின் அதிகாரத்தின் கீழ் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னைப் போலவே, ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நான் ஆட்சிக்கு வந்தால், அதிபருக்கு எல்லை மீறிய அதிகாரத்தை வழங்கும் சட்டப் பிரிவை 100 நாள்களுக்குள் நீக்குவேன். இந்த வாக்குறுதியுடன் தேர்தலில் மக்களைச் சந்திப்பேன்’ என்றார் ஸ்ரீசேனா. இதற்கிடையே, கட்சியிலிருந்து ஸ்ரீசேனா விலகியுள்ளதற்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட இலங்கை சுதந்திரக் கட்சி மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னேவும், கட்சியிலிருந்து விலகி எதிர்க் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் வரும் ஜனவரி மாதம் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...