அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   13 , 2021  08:15:26 IST

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் ஈரோடை பூர்வீகமாக கொண்டவர். 1965ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த்.
 
ஸ்ரீகாந்தின் வாழ்வில் முக்கிய அத்தியாயமாக ‘தங்கப்பதக்கம்’ படம் திகழ்ந்தது. அந்த படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீகாந்த் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தொடர்ந்து சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் முதல் பிற்கால கலையுலக ஜாம்பவான்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஸ்ரீகாந்த். தற்காலப் படங்கள் பலவற்றிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
இந்தநிலையில், அவர், வயது முதிர்ச்சி காரணமாக காலமானார். அவருடைய மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
 
அவருடைய மறைவு குறித்த நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவில், ‘என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த்தின் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னதாக ஸ்ரீகாந்திக்கின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். அவருடைய இரங்கல் குறிப்பில், ‘பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இயக்குநர் ஸ்ரீதரால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்கமுடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமின்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவர் திகழ்ந்துள்ளார்.
 
எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன். பலமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளேன். ஸ்ரீகாந்த்தை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...