???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மறக்க முடியாத மயிலு!

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   24 , 2018  20:24:22 IST


Andhimazhai Image
திடீரென தன் 54 வயதில் தன் மூச்சை நிறுத்திக்கொண்ட நடிகை ஸ்ரீதேவி தமிழில் கொடிகட்டிப் பறந்து பின்னர் இந்திப்பட உலகிலும் வாகை சூடிய தனிப்பெருமைக்கு உரியவர்.
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவரான ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தவர். துணைவன் படத்தில் அறிமுகமானாலும் கதாநாயகியாக அவர் பாலசந்தரின் மூன்று முடிச்சு படத்தில் அறிமுகமானார். நடிகர் ரஜினி, கமல் ஆகியோருடன் ஸ்ரீதேவியும் நடித்த அப்படம் இந்த மூவருக்குமே முக்கியமான படம். அதன் பின்னர் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்திலும் இதே மூன்று பேர் கலவைதான். இப்படம் ஸ்ரீதேவியை உச்சிக்கே கொண்டுசென்றது எனலாம். இதில் அவர் நடித்த மயிலு பாத்திரமாகவே இன்றும் பலர் மனதில் அவர் தங்கிவிட்டார். அவருக்கு வயதே ஆகவில்லை.
 
தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்தவர் இந்திக்கு சென்று நடித்த முதல் படம் ஓடவில்லை என்றாலும் அடுத்தபடமான ஹிம்மத்வாலா அவரை உச்சியில் சென்று வைத்தது. அவர் அங்கே நம்பர் ஒன் நடிகையாக பல ஆண்டுகள் வலம் வந்தார். அனில்கபூர் அண்ணன் போனி கபூரை மணந்துகொண்டு சினிமாவை விட்டு விலகினாலும் சில டிவி தொடர்களின் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இங்கிலிஷ் விங்க்லிஷ் படம் மூலமாக மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்தார். அவருக்காகவே உருவாக்கப்பட்ட அப்படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்புத்திறமை மீண்டும் வெளிப்பட்டது.
 
ஸ்ரீதேவியின் முக்கியமான பண்பு அவருடைய அபாரமான நடிப்புத் திறமை. அதை உணரவேண்டுமானால் பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறையைத்தான் பார்க்கவேண்டும். கமலுக்கே ஒவ்வொரு பிரேமிலும் தண்ணி காட்டியிருப்பார் அவர். திரை உலகுக்கு மிகப்பெரிய  இழப்பு.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...