![]() |
கொரோனா சிறப்பு வார்டு: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைPosted : வெள்ளிக்கிழமை, மார்ச் 27 , 2020 12:02:03 IST
![]() சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவை முதல்வர் பழனிசாமி இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து கொரோனா சிறப்பு வார்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார் . மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது: ”பிரதமர் மோடி உடன் ஆலோசித்து தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் தமிழகம் முதற்கட்டத்தில் உள்ளது. அவை இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்த முடியும். அனைத்து துறைகள் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அத்தியாவசிய தேவை இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம். ஓமந்தூரார், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் துவக்கப்பட்டுள்ளது. சளி, இருமல் காய்ச்சல் இருந்தால் சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும். மக்களின் வசதிக்காக 12 அரசு ஆய்வகங்கள், 2 தனியார் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் செலியர்கள், 530 மருத்துவர்கள், ஆயிரம் லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’”
இவ்வாறு அவர் கூறினார்.
|
|