???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி நீதிமன்றம்: முதலமைச்சர் அறிவிப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2019  23:28:13 IST

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நீதிமன்றத்தை திறந்துவைத்தார்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் மொத்தம் 1,149 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. சென்னையில் 126 நீதிமன்றங்களும், இதர மாவட்டங்களில் 1,023 நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன.

நீதிமன்றங்களுக்கான கட்டிடங்கள் கட்டுதல், பராமரித்தல், நீதிபதிகளுக்காக குடியிருப்புகள் கட்டுதல் போன்ற நீதித்துறைக்கான மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 2011-12 முதல் 2018-19ம் ஆண்டுகள் வரை 456 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018௧9ம் ஆண்டில் தமிழக அரசு அமைத்துள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு 2018-19ம் ஆண்டில், 101 கோடியே 89 லட்சம் ரூபாய் தமிழக அரசால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 2019- 2020ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிர்வாகத்திற்காக 1,265 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காரியமங்கலம், விக்கிரவாண்டி, சிங்கம்புணரி, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகியவை வரும் ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ளன.

பணியில் இருக்கும்போது இறக்கும் வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேமநலநிதி 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 4 கோடி ரூபாயில் இருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 220 உரிமையியல் நீதிபதி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2018- 19ம் ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன.

தமழக அரசின் இடையறா முயற்சியின் காரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையிலே, விரைவில் தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க தலைமை நீதிபதிக்கு அரசு பரிந்துரை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...