???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   01 , 2020  22:12:38 IST

ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டு ஒன்றாம் தேதியான இன்றே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையொட்டி, கேரள தலைநகரம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதலே மழை நீடித்தது.

தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கன்னூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை, அடுத்தடுத்த நாட்களில் கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை நாட்டின் மொத்த மழைப்பொழிவில் 75 சதவிகிதமாக இருந்து வருகிறது.

இதனிடையே, தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. கோவாவிற்கு தென்மேற்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத் மாநிலம் சூரத்துக்கு தென்மேற்கு 920 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது

இது செவ்வாய்கிழமை புயலாக வலுப்பெற்று மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும் என்றும் இதன் காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு, கேரள கடற்கரை பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு வரும் 4ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாமென சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதேசமயம், வெப்பச்சலனம் காரணமாக, சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...