???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னையில் களைகட்டும் தென்னிந்திய மக்கள் நாடக விழா!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   03 , 2019  09:10:30 IST


Andhimazhai Image
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சென்னை கேரள சமாஜம் இணைந்து நடத்தும் தென்னிந்திய மக்கள் நாடக விழா சென்னையில் நேற்று தொடங்கியது.
 
சென்னை கேரள சமாஜம் அரங்கில் நேற்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதனை தொடங்கிவைத்தார். துவக்க நிகழ்ச்சியில் முதுபெரும் நடிகை சச்சு, மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், நடிகர் நாசர், இயக்குநர் பா. ரஞ்சித், எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா, கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணா, நடிகர் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
 
நேற்று தொடங்கிய இந்த தென்னிந்திய மக்கள் நாடக விழாவில், 5 மொழிகளின் 500 கலைஞர்களது பங்களிப்போடு 32 நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. வரும் 6-ஆம் தேதி இந்த நாடக திருவிழா நிறைவடைகிறது.
 
இந்த நிகழ்ச்சியின் முதல் நாடகமாக பிரளயனின் நெறியாள்கையில் கவிஞர் தமிழ் ஒளியின் 'வீராயி' நிகழ்த்தப்பட்டது. சாதிய வன்மத்தால் வஞ்சிக்கப்பட்ட வீராயியின் வாழ்கையை சித்தரிப்பதே இந்த நாடகம். கவிஞர் தமிழ் ஒளி எழுதியதுபோல் இறுதியில் வீராயி – ஆனந்தன் படுகொலையோடு முடிக்காமல், அவர்கள் இருவரும் சாதி ஒழிப்பு வேட்கையோடு புதிய வாழ்கையை தொடங்குவதாக முடித்தகனம் நம்பிக்கையை ஊட்டும்படி அமைந்தது.
 
 
இதன்பிறகு அட்டவணையில் இரண்டாவதாக இருந்த 'நான் சாவித்திரி பாயைப் படிக்கிறேன்' நாடகம். பலரையும் எதிர்பார்பில் ஆழ்த்திய இந்த நாடகம் சாவித்திரி பாயின் பூலேவின் வாழ்கையை சித்தரித்தது. சாவித்திரி பாயை படிக்க எத்தனிக்கும் ஒரு பெண் அவராகவே மாறி சாவித்திரி பாயின் உன்னத வாழ்வை சொல்லும்படி உருவாக்கப்பட்டது இதன் சிறப்பு. அரங்கில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட பொருட்களை நுட்பமாகவும், அர்தத்துடனும் பயன்படுத்தி, லயிக்கும் பின்னணி இசைக்கோர்வையோடு உருவாக்கப்பட்டிருந்த நாடகம் சாவித்திரி பாய் பூலேவை நிஜமாக கண்டுணர செய்தது. யாழ் கலை மையம் சார்பாக  ஞா. கோபி இந்நாடகத்தை இயக்கினார்.
 
இதன்பிறகு ந. முத்துசாமியின் 'அப்பாவும் பிள்ளையும்', 'காந்தியும் அம்பேத்கரும்' ஆகிய நாடகங்கள் இடம்பெற்றன. கன்னட நாடகமான 'காந்தியும் அம்பேத்கரும்' மராத்தியில் பிரேமானந்த் கஜ்வி எழுதியதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு. அம்பேத்கர் – காந்தி ஆகியோருக்கு இடையே நடக்கும் கருத்தியல் உரையாடல்கள், விவாதத்தை வரலாற்றுரீதியாக எடுத்துரைக்கும் முக்கிய நாடகமாக இது சொல்லப்படுகிறது. மொழி புரியாத இடைவெளி இருந்தாலும் இதனை தமிழிலும் உருவாக்கப்பட வேண்டிய தேவையை இந்நாடகம் உணர்த்தியது.
 
தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மக்கள் நாடக விழா நடைபெறவுள்ளது. இதில் பல முக்கிய நாடகங்கள் இடம்பெறுகின்றன. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...