அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஒரே பிரசவத்தில் பத்து குழந்தைகள்!

Posted : புதன்கிழமை,   ஜுன்   09 , 2021  15:34:24 IST


Andhimazhai Image

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா சிசி, என்ற 25 வயது இளம்பெண் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக கருதப்பட்ட நிலையில், தற்போது ஒரே பிரசவத்தின் மூலம் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தாமரா சித்தோல்  அந்த சாதனையை முறியடித்துள்ளார். இது விரைவில் உலக சாதனையாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

37 வயதாகும் கோஷியாமி தாமரா சித்தோலுக்கு கடந்த ஜூன் 7ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பிரசவத்தில் பத்து குழந்தைகள் பிறந்தனர். சிசேரியன் மூலமே அனைத்து குழந்தைகளையும் வெளியே எடுத்துள்ளனர். இதை அவருடைய கணவர் டெபோகோ சோடெட்சி உறுதிப்படுத்தியுள்ளார். இதில் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள்.

சித்தோல் கர்ப்பமாக இருந்தபோது அவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அதன் பின்னர் அவர் எட்டு குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது பத்து குழந்தைகளைப்  பெற்றெடுத்துள்ளார்.

சித்தோல் மற்றும் டெபோகோ தம்பதியினருக்கு ஏற்கனவே 6 வயதுள்ள இரட்டை குழந்தைகள் உள்ளன. டெபோகோ தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். இது பற்றி அவர் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், ”சித்தோல் ஏழு மாதங்கள் மற்றும் ஏழு நாட்கள் கர்ப்பமாக இருந்தார். தற்போது பிரசவத்தில் 7ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்றார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...